பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமன்னர்கள் 329

இவன் காலம், வடபுலத்தே ஆரியப் பேரரசுகள் வலுப் பெற்றிருந்த காலம் ஆகும். நந்தமர்பு வலிகுன்றி, மோரிய மரபு தோன்றிய காலவெல்லையை இவன் காலமாக வரலாற் முசிரியர்கள் குறிப்பிடுவார்கள். இவன் வடபுலத்து வேந்தர் பலரையும் வெற்றிகொண்டு, இமய்ம்வரை தன் மற்மாண்பை உணரச்செய்து, இமயவரம்பன்' என்னும் விருதுப்பெய்ரை யும் பெற்றுச் சிறந்தவன். கழாஅத் தலையார், பரனர் ஆகியோர் பாடியுள்ள குடக்கோ நெடுஞ்சேரலாதனும், காப்பியாற்றுக் காப்பியஞர், மாமூலஞர் ஆகியோர் பாடி யுள்ள சேரலாதன்' என்ப்ானும் இவனே என்பர்.

பல துறைகளுள் சீரும் சிறப்பும் புகழும் மறமேம்பாடும் கொடைக் குணமும் தொண்டு விளங்கிய இவன், தன் முதுமைப் பருவத்திலும் போர்செய்தலைக் கைவிடாதாஞ்க ளங்குகின்றன். சோழன் வேற்பஃறடக்கைப் பொருநற் கிள்ளியோடு போர்ப்புறத்து நடந்த பெரும்போரில், பெரும் புண்பட்டு அந்நிலையினும் தன்னைப் பாடிய கழாஅத் தீலை யாருக்கு தன் மார்பின் ஆரத்தை வழங்கிய சிறப்பினன் இவன் (புறம். 368). வெண்ணிக்குயத்தியாரின் புறப்பாட்டு (66) இவன் புறப்புண் நாணி வடக்கிருந்து மிகப் புகழ் உலகம் எய்தினன்' எனக் கூறும். w

3. பல்யானைச் செல்கெழு குட்டுவன்

இவனைப் பற்றிய செய்திகளைப் பாலைக் கெளதமஞர் பாடி ள்ள இப் பதிற்றுப்பத்துச் செய்யுட்களால் மட்டுமே அறிகின்ருேம். பிற சங்க நூற்களுள் இவனைப் பற்றிய செய் திகள்.எதுவும் காணப் பெறவில்லை, இவன், பாலைக் கெளதம ஞரின் விருப்பத்திற்கு இணங்கப் பத்துவேள்விகளை இயற்றி அவரையும் அவர் மனைவியையும் சுவர்க்கத்துக்கு அனுப்பிய வன். இவர் பாடிய புறநானூற்று 366 ஆம் செய்யுளும் இவனைப் பற்றியதாகவே தோன்றுகின்றது. அறவோன்' மகனே! என்ற குறிப்பை வைத்துத் தவருகத் தருமபுத்திர னைப் பாடியதெனக் கூறியிருக்கலாம். அறவோன்! உதியஞ் சேரலே என்பது அவனைப்பற்றிய செய்திகளால் விளங்கும். இவன் உம்பற் காட்டுப் பகுதியை வென்று தன் ஆட்சியை நிலைபெறுத்தியவன்; அகப்பா என்னும் கோட்டையை அழித் தவன்: மண் வகுத்து ஈத்தவன்; கடுங்களிற்று யானைப் புணர் நிரை நீட்டி இருகடல் நீரும் ஒருபகல் ஆடியவன்; அயிரையைப் பரவியவன், இவனுடைய குரு நெடும்பாரதா யஞர் என்பவர். இவன் புகழோடு 25 ஆண்டுகள் ஆட்சி