பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

பதிற்றுப்பத்து தெளிவுரை

330 н பதிற்றுப்பத்து தெளிவுரை

நடத்தியதன் பின்னர், தன் குருவோடு காடுசென்று தவமி

யற்றி உயர்நில் உலகம் சென்றனன். இவனுடைய பலவான சிறப்புக்களையும் பதிற்றுப்பத்துச் செய்யுட்கள் விரிவாக உரைத்துப் போற்றுகின்றன. பூழியர் கோ' எனவும், “மழவர் மெய்ம்ம்ன்ற' எனவும், வெல்போர்க் குட்டுவ" என்வும், அயிரைப் பொருநன்’ எனவும் இவன் குறிக்கப்படு கின்ருன். வேயுறழ் பண்த்தேர்ள் இவளோடு ஆயிர வெள்ளம் வாழிய பிலவே' என வாழ்த்தலால், இப் பாட்டு களைப் பாடிய காலத்து இவன் தேவியும் இருந்தாளாதல் வேண்டும். இவன் வழியினர்பற்றிய வரலாற்றுக் குறிப்புக் கள் அறியப்படவில்லை. இவன் நாடுகாவற் சிறப்பினை எல்லாம் அருமைப்பட இச் செய்யுட்கள் உரைக்கின்றன.

4. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்

இவனை நான்காம் பத்தாற் பாடியவர் ஆசிரியர் காப்பி யாற்றுக் காப்பியஞர் ஆவர். இவன் சேரலாதனுக்கு வேளாவிக்கோமான் பதும்ன்தேவி ஈன்ற மகன் என்கிறது பதிகம். இவன் 25 ஆண்டுகள் அரசு வீற்றிருந்தவன். பதிற்றுப்பத்தின் அமைப்பு, இவன் செங்குட்டுவனுக்கு மூத்தோன் எனக் காட்டுகின்றது. இவனைப் பாடிய பிற புலவர் கல்லாடனர் ஆவர். பூழிநாட்டுப் படைச்செலவு, கடம்பின் பெருவாயில் நன்னனைத் தோல்வியடையச் செய்தது போன்றவை இவன் மறமாண்பு குறிக்கும் பட்ையெழுச்சிகள் ஆகும். இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாட் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்' என்று அகநானூற்றுள் (199) கல்லாடனர் இவன் சிறப்பைக் கூறுகின்றன்ர். அவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியவர். இதஞல், இவனையும் அக்காலத்தவகைக் கொள்ளலாம். இப்பத்து இவனது மறமாண்பையும், கொடை மாண்பையும், செங் கோன்மைச் செவ்வியையும் விரிவாக உரைத்துப் போற்று கின்றன. 'விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த செம்மீன் அனயள் நின் தொன்னகர்ச் செல்வி' என இவள் தேவியை யும் போற்றுகின்றனர்.

'உலகத்தோரே பலர்மற் செல்வர்' என்னும் செய்யுள் இவனது குணநலத்தையும், பிறர்க்கென வாழ்ந்த பேராண் மைத் திறத்தையும் காட்டுகின்றது. -