பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமன்னர் கள் - 3.31

5. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

இவன் பரணர் பெருமான் பாடிய ஐந்தாம் பத்தின் தலைவன் ஆவான். 'குடவர் கோமான் நெடுஞ்சேரலாதனுக் குச் சோழன் மணக்கிள்ளி யீன்ற மகன் இவன் என்று கூறு கிறது இப் பத்தின் பதிகம். இவனே கடவுட் பத்தினிக்குப் படிமம் அமைத்த சிறப்பினை உடையவன்; ஆரிய அரசர்களே வீழ்த்தியவன்; வியலூர், கொடுகூர், பழையனின் போவூர் போன்றவற்றை அழித்தவன்.

இவன் 55 ஆண்டுகள் வீற்றிருந்தவன். செருச் செய் முன்போடு முந்நீர் முற்றி, ஒங்கு திரைப் பெளவம் நீங்க ஒட்டிய நீர்மாண் எஃகம் என இவன் கடலிடத்துப் பகை வரை வெற்றிகொண்டதன்ை அகநானூற்றுச் செய்யுளும் கூறும் (அகம். 212). சிலப்பதிகாரத்து வஞ்சிக்காண்டமும் இவன் மற மாண்புகளை விளக்கும்.

ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்று முதிர் வடவரை வணங்குவிற் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் (அகம். 396) இவன். இவன் கரிகால் வளவன் காலத்தவன் என்பதனைப் பரணர் பாட்டுக்கள் வலியுறுத்தும். இவனது வடபுல வெற்றியும், கடலிடைவெற்றியும் கருதினல், கிரேக்க மாவீரனை அலெக்சாந்தரின் போர்மறத்தோடு ஒப்பிட்டுக் கூறலாம். அ ண் ண ல் யானை அடு போர்க் குட்டுவ'கிைய இவன், கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை வடதிசை எல்லை இமயமாகத் தென்னங் குமரி யொடு ஆயிடை அரசர் அன்ைவரினும் மேம்பட்டு விளங்கிய வனும் ஆவன். மோகூர்ப் பழைய்னை இவன் வென்றதும், எழுமுடி மார்பின் எய்திய சேரல் இவன் என்பதும், உடை திரைப் பரப்பிற் படுகடல் ஒட்டிய வெல்புகழ்க் குட்டுவன்' இவன் என்பதும், "இப் பாட்டுக்களால் அறியப்படுகின்றன. வன், வண்ங்கிய சாயலும் வணங்கா ஆண்மையும்' கொண்டவன். இவன் சிறப்புக்களைத் தொடுத்து உரைப் பது 'வெருவரு_புனற்ருர் ஏன்னும் செய்யுள். 'வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக் குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்' இவன் தந்தை. இவனே. அவன் புகழை யும் நிலைபெறுத்தி, மேலும் பெருக்கிய பேர்ாளளுக விளங்கி 55 ஆண்டுகள் வீற்றிருந்தவன். இவன் மகன் குட்டுவன் சேரல் என்பது பதிகத்தால் அறியப்படும் செய்தியாகும். பெறற்கரிய தன் மகனும், இளவரசனுமாகிய குட்டுவன்