பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

பதிற்றுப்பத்து தெளிவுரை

332 பதிற்றுப்பத்து தெளிவுரை

சேரலேயும் பரணர்க்குப் பரிசிலாகத் தந்து மகிழ்ந்த பெருங் கொடையாளன் இவன்.

8. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடிய ஆரும் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவன் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோம்ான் மகளுக்கும் பிறந்தவன். தண்டகாரணியத்துக் கோட்பட்ட வருடையை மீட்டுத் தொண்டியுட் கொண்டுதந்தவன். 'வான வரம்பன்' எனப் பேர் இனிது விளக்கியவன். குழவி கொள்வாரின் குடிபுறங் காத்தவன். முப்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்த வன். இவனது போர்ம்றத்தை, மழைதவழும் பெருங் குன்றத்துச் செயிருடைய வரவெறிந்து, கடுஞ்சினத்த மிடல் தபுக்கும், பெருஞ்சினப் புயலேறு அனையை என்பதளுற் குறிப்பிட்டுள்ளனர். இவன் கலையுணர்வும் கொண்டவன் ஆதலைச் சிறுசெங்குவள்ை என்னுஞ் செயயுள்ால் அறியலாம். இவனது கொடைச்சிறப்பை, உயர்நிலை உலகத்துச் செல் லாது, இவனின்று இருநிலமருங்கின் நெடிது மன்னியரோ என வாழ்த்துதலால் அறியலாம். அறிவும் சால்பும் அன்பும் பண்பும் கொடைமையும் வெம்மையும் ஒருங்கே பெற்று விளங்கிய சிறப்பினன் இவளுதலை, இச் செய்யுட்கள் பலவும் விளங்கக்கூறி இவனைப் போற்றுகின்றன.

7. செல்வக் கடுங்கோ வாழியாதன்

இவன் இரும்பொறை மரபினன். சேரமான் அந்துவஞ் சேரல் இருழ்பொறைக்கும், ஒருதந்தை ஈன்ற மகள் பொறை யன் பெருந்தேவிக்கும் மகளுகப் பிறந்தவன். மாயவண்ணன்' இவனது புரோகிதனுக விளங்கியவன். வேள்விகள் இயற்றி பும், அறம்பல செய்தும் புகழோடு 25 ஆண்டுகள் வீற்றிருந் தவன் இவன். இவனுடைய பல்வகைக் குணமேம்பாடுகளே யும் அருவி யாம்பல்' என்னும் செய்யுள் விளக்கிக் கூறு கின்றது. ஆயிர வெள்ள ஊழி, வாழியாத வாழிய பலவே' என்று மனந்திறந்து வாழ்த்துகின்ருர் கபிலர் பெ மான். 'மழையினும் பெரும்பயம் பொழிந்தவன் இவன். அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர்பட்டு இருஞ்சேறு ஆடியபடி விளங்கியது இவன் அரண்மனை முற்றம். இவனுக்கு உரித்தாயிருந்தது நேரிமல்ல: அதிகுல் இவரே நேரிப்பொருநன் எனவும் கூறுவர்.