பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 பதிற்றுப்பத்து தெளிவுரை

அனையவன். புகார்ச் செல்வன்' எனவும், பூழியர் மெய்ம் மறை' எனவும், கொல்லிப் பொருநன்’ எனவும், கொடித், தேர்ப் பொறையன்' எனவும் இவனைப் போற்றுவர். இவன் புதல்வனே இவன் தேவி பெற்று நல்கிய சிறப்பை நலம்பெறு திருமணி’ என்னும் செய்யுளால் அறியினும், அவன் யாவன் என்பது அறியப்படாதே உள்ளது. கடவுள் அயிரை நிலைஇக் கேடிலவாக' இவன் புகழ் என்றும் விளங்கும் தகைமைத்து <器@LP·

9. இளஞ்சேரல் இரும்பொறை

இவன் பெருங்குன்றுார் கிழார் பாடிய ஒன்பதாம் பத்தின் பாட்டுடைத் தலைவன். குட்டுவன் இரும்பொறைக்கும் வேண்மாள் அந்துவஞ் செள்ளைக்கும் பிறந்தவன். 16 ஆண்டு கள் அரசு வீற்றிருந்தவன். மையூர் கிழான் இவன் அமைச்சன். பெர்த்தியாண்ட பெருஞ்சோழனையும், வித்தை யாண்ட இளம்பழையன் மாறனையும் வெற்றிகொண்டவன். மந்திரமரபில் தெய்வம் பேணியும், சதுக்கபூதரை வஞ்சியில் நிறுவியும், சாந்தி வேட்டுச் சிறந்தவன் இவன்.

இவன் தேவியின் வனப்பையெல்லாம் 'நிழல்விடு கட்டி’ என்னுஞ் செய்யுளால் அறியலாம். மருதம் பாடிய இளங் கடுங்கோ இவனே எனவும் கூறுவர். பாடுநர் கொளக் கொளக் குறையாச் செல்வத்தையும், செற்ருேர் கொலக் கொலக் குறையாத் தானையையும், சான்ருேர் வண்மையுஞ் செம்மையும் சால்பும் அறனும் புகன்று புகழ்ந்து அசைய்ர் நல்லிசையையும் கொண்டு, நிலந்தரு திருவின் நெடியோனைப் போல விளங்கியவன் இவன். இவனை விறன் மாந்தரன் விறல் மருக' என்று கூறுவதும் கவனிக்கத்தக்கது. இதல்ை வன மாந்தரஞ் சேரலின் மகளுகவும் கொள்வர். இவ்ன் ப்புக்களை, எல்லாம் இந்நூலின் 90ஆம் செய்யுள் (வலிகெழு தடக்கை) ஒருங்கே தொகுத்து உரைக்கின்றது.