பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

பதிற்றுப்பத்து தெளிவுரை

38 பதிற்றுப்பத்து தெளிவுரை

ளுக்குள்ளே பூசலிட்டு மாறுபாடு கொள்ளுகின்ற பேரழகினை யும், ஒளிவிளக்கம் பொருந்திய அணிகலன்களையும், தம் ஒளி யால்ே மறையச்செய்தப்டி வண்டினம் மொய்க்கின்றதும் கடைசுருண்டு தாழ்ந்து தொங்குகின்றதுமான கூந்தலையும், வளைவான குண்ட்லங்களையும் உடையோளான அரசமா தேவியின் கணவனே!

பலவாகிய போர்க் களிறுகளின் தொகுதியோடு, வெற்றிக்கொடிகள் அசைந்தாடிக் கொண்டிருக்கும் படை யாகிய ஏரைக்கொண்டு, பகைப்படையினரை எல்லாம் உழுதழித்து வெற்றிகொள்ளும் படையேர் உழவனே! பாடு தற்கு இனிதானவளுகிய வேந்தனே!

ஒளிவிளங்கும் மணிகள் நெருக்கமாகப் பதிக்கப்பெற்ற பொற்கலன்களை அணிந்தோராகத், தம் ஆணேச் சக்கரத் தைச் ச்ெலுத்திக், கடலாற் சூழப்பெற்ற பூமியாகிய இந்த நாவலந் தண்பொழில் முழுதையும் ஆட்சிசெய்தவரான நின் சேரர்குலத்து முன்னேர்களைப் போலவே, நீயும் நிலையான புகழாலே மேம்பட்டோகை, இவ்வுலகிலே என்றும் நிலை பெற்று நிற்பாயாக!

கெடாத நல்ல புகழோடும் நிலைபெற்று, இவ்வுலகத் தோடுங்கூட, நீயும் கெடாத் நல்ல புகழை நிலைபெறச்செய்து, இன்னும் நெடுங்காலம் வாழ்வாயாக, பெருமானே!

சொற்பொருள் : நிலம் நீர் வளி விசும்பு என்பன நாற் பெரும் பூதங்கள்; இவை இவ்வளவின என்று அளவிட்டு அறிதற்கு அரியன; இவற்றின் உறவாலேயே உலகப் பொருள்கள் பலவும் உண்டாயின. இரு முந்நீர்க் குட்டமும், வியன் ஞானத்து அகலமும், வளிவழங்கு திசையும், வறிது நிலைஇய காயமும் என்ருங்கு அவையளந்து அறியினும் அளத் தற்கு அரியை எனப் புறநானூற்றினும், அளவிறந்த பேராற்றலுக்கு இவற்றை உவமையாககி உரைப்பர் (புறம். 20 - குறுங்கோழியூர் கிழார் பாட்டு). நிலம் நீரினும், நீர் வளியினும், வளி விசும்பினும் சென்று ஒடுங்கும். "தீ" ஒளி யுடைத்தாதலின் அதனைக் கோளோடு சேர்த்துக் கூறினர்.

"நாள்' என்பது அசுவனி முதலாகக் கூறப்படும் 27 நட்சத்திரக் கூட்டங்களையும், கோள்' என்பது ஞாயிற்றையும் திங்களையும் நீக்கி நின்ற செவ்வாயும் புதனும் வியாழனும் வெள்ளியும் சனியும் ஆகியவற்றையும் குறிப்பன. பஞ்ச் பூதங், களுள் தீயினைக் கனையழல்' என இதனேடுங் கூட்டிக்