உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

பதிற்றுப்பத்து தெளிவுரை

உடையவாகவும் அமைந்தன பகைநாட்டுப் புறமதில்கள். ஒரு நாட்டையே கண்டாற்போலப் பரந்து விளங்கும், அம்புக் கட்டுகளைக் கொண்டவான அகன்ற இடை மதில்கள். கோட்டைக் கதவுகளிலே தொங்கலாக அமைக்கப்பெற்ற கணையமரங்கள் பலவாகச் செறிக்கப் பெற்றிருக்கும். ஈன்றதன் அணிமையை உடையவளான பெண், தனக்கும் தன் சேய்க்கும் பேய்க்குற்றம் வராதபடிக்குப் பூசிக்கொள்ளும் ஐயவி அல்லாத, ‘ஐயவித் துலாம்’ என்னும் படைக் கருவிகளும் அவ்விடத்தே இருந்தன.

நீதான். நின் களிற்றுப் பெரும்படையோடும் அவ் அரண்களைக் கொள்ளக் கருதினையாகச் சென்றனை. நின் களிறுகள் அக் கோட்டை மதில்களிலுள்ள அழகான நல்ல நெடுங்கதவுகளை எல்லாம் மோதிச் சிதைத்தன. அதனாலே தம் கொம்புகளின் முனைப்பகுதி முறிபட்டுப்போன சில களிறுகள், குறுங்கோட்டினவாய்ப் பன்றி ஏறுகளேபோலத் தோன்றின. எனினும், மதநீரைச் சொரிவனவாகிக், கடுஞ் சினத்தை மிகுத்தனவுமாகி, அக் கோட்டைக் கதவுகளுக்கு இட்டிருந்த கணையமரமும் துலாமரமுமாகிய காவல்களை எல்லாம் மோதி அழித்தன. அவ்வாறு அழித்த அக்களிறுகள் தம் சினம் தணியாவாய், மேலும் பிளிறிக்கொண்டே இருக்கின்ற பாசறையினிடத்தே, நீயும் நெடிதுகாலமாகவே தங்கியிருப்போனாக உள்ளனை. அதனாலே, யானும் நின்னைக் காணுதற் பொருட்டாக இவ்விடத்திற்கே ளந்துள்ளேன், பெருமானே!

அறக் கற்பை உடையவள், அடக்கத்தோடுங் கூடிய பெண்மையைக் கொண்டவள், நின்னுடைய அரசமாதேவி, நின்னோடும் ஊடிச்சினந்த காலத்தும் இனிய சொற்களே பேசுகின்ற இயல்பினள் அவள். இனிதான இளமுறுவலையும், வாயூறலாகிய அமுதத்தையும் கொண்ட சிவந்த வாயினள் அவள். அமர்த்த கண்களையும், ஒளி சுடரிடுகின்ற நெற்றியையும் பெற்றவள் அவள். நின் தேவியான அவள்தான் நின்னைப் பிரிந்து உறைதலாலே ஏற்பட்ட தன் துயரத்தைப் பொறுக்க மாட்டாதாளாயினள். நின்னையே நினைந்து நினைந்து வருந்தும் வருத்தத்தினளும் ஆயினள்!

தோன்றலே அழகிய மணிகள் இழைக்கப் பெற்றதும், ஒட்டற்ற பசும்பொன்னாலே செய்யப்பெற்றதுமான பூண் ஆரமானது, விளங்கும் கதிர்களைக் கொண்ட வயிரமணிகளோடும் மாறுபட்டுச் சுடரிட்டுக் கொண்டிருக்கத்