50
பதிற்றுப்பத்து தெளிவுரை
‘புறத்துறையிற் பெறுகின்ற வெற்றியே கருதினை: அகத்துறையிற் பெறுகின்ற இன்பத்தை மறந்தனை; அதனால், நின் தேவியையும் இழந்துவிடப் போகின்றனை' என்கின்றன்ர். தோன்றல் - பெருமையிற் சிறந்தோன்: அண்மை விளி.
நின் மார்பிடத்தே கண் துயிலும் இனிய பாயலின் நினைவினள்; ஆதலின் பிற பாயலிற் படுத்தும் கண் உறங்காத நிலையினள் ஆயினள் என்றதாம். 'புரையோர்' என்னும் பன்மை, காதற் பரத்தையரைக் குறித்தது என்பர்; அவன் தேவியை குறித்தது என்பதே பொருத்தமாகும்.
விளக்கம் : "நாடு கண்டன்ன" என்றது, இடத்தின் அகற்சி நோக்கிக் கூறியதாகும்; நெடுநாட்பட அடைமதிற் பட நேரிட்ட காலத்தும், விளைத்துக் கோடற்கு வயலும் குளமும் உளவாகச் சமைத்து வைத்துள்ள தன்மை. துஞ்சு மரம் - கணையமரம்.
'பால்' என்றது, இல்லுறை காலத்து மார்பைத் தழுவக் கொடுத்தலையும், 'கொளா அல்’ என்றது, பிரிவுக் காலத்து அதனைத் தன்பாற் கொண்டுபோதலும் ஆம்.
17. வலம்படு வியன் பணை!
துரை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு : செந்தூக்கு. பெயர் : வலம்படு வியன்பணை. இதனாற் சொல்லியது: சேரலாதனின் அருளுதற்செவ்வியும் வென்றிமேம்பாடும்.
["போரினைச் செய்து வருத்தமேதும் அடையாதே. பகைவர் தாமே ஒலியைக் கேட்டவளவிலே வெருவியோடு மாறு முழங்குவதாய், அரசனுக்குத் தன் முழக்கத்தாலேயே வெற்றியினை வாய்க்கப்பண்ணும் முரசம்' என்று முரசத்தை நயமுறச் சிறப்பித்துக் கூறியதனால், இப் பாடலுக்கு இது பெயராயிற்று.]
புரைவது நினைப்பிற் புரைவதோ இன்றே
பெரிய தப்புந ராயினும் பகைவர்
பணிந்துதிறை பகரக் கொள்ளுனை யாதலின்
துளங்குபிசிர் உடைய மாக்கடல் நீக்கிக்
கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்டணை
5