இரண்டாம் பத்து
51
ஆடுநர் பெயர்ந்துவந் தரும்பலி தூஉய்க்
கடிப்புக் கண்ணுறூஉம் தொடித்தோள் இயவர்
நனந்தலைப் பைஞ்ஞிலம் வருகவிக் நிழலென
ஞாயிறு புகன்ற தீதுசீர் சிறப்பின்
10
கடுங்கால் கொட்கும் நன்பெரும் பரப்பின்
விசும்புதோய் வெண்குடை நுவலும்
பசும்பூண் மார்ப! பாடினி வேந்தே!
அலைகின்ற அலைகளானவை கரையிடத்தே வந்து மோதிச் சின்னஞ்சிறு திவலைகளாக உடைந்து போகும்படியாகப் பெருங்கடலினைக் கலமேறிக் கடந்தும் சென்றனை. அவ் விடத்துப் பகைவரது காவன் மரமாகியிருந்த கடம்பினை அறுத்துக் கொணர்ந்து, அதனால் நினக்குரிய வெற்றி முரசத்தையும் செய்துகொண்டனை. "வெற்றியுண்டாக" என ஒலிக்கின்ற அப் பெரிய முரசுக்குப், பகைவரை வெல்வோரான நின்படை மறவர், களத்தினின்றும் மீண்டும் வந்ததும், அரிய பலியினை ஊட்டிப் போற்றிப் பரைசுவர். அங்ஙணம் வந்து அவர்கள் பரைசுமாறு, முரசின்கண்ணிடத்தே குறுந்தடி கொண்டு அறைந்து முழக்குவோரான, தொடியணிந்த தோள்களையுடைய இயவர்கள் முழக்கியபடியே இருப்பார்கள்.
ஞாயிறு தன் பகையாகிய இருளினைக் கெடுப்பதனை விரும்பியதாகச் செல்லுகின்ற குற்றமற்ற சிறப்பினையும், நீரைக்கொண்ட மேகக்கூட்டங்கள் திரண்டு எழுந்து பரவுகின்ற பரப்பினையும் உடையது வானம். அதனைத் தோய்ந் தாற்போலே உயர்ந்து விளங்குவது நின் வெண்கொற்றக் குடை. அதனைச் சுட்டிக்காட்டி, "தமக்கு அரண் யாதினையும் காணாதே திக்கனைத்தும் தேடியலைகின்றவரான விரிந்த இடத்தையுடைய பசுமையான நிலத்தே வாழ்கின்ற மக்கள் எல்லாரும் இந் நிழலின்கண்ணே வத்தடைவீராக’ எனச் சொல்லுவதுபோல, அம் முரசின் முழக்கமும் ஒலித்தபடியேயிருக்கும்!
பசிய பொற்பூணினை அணிந்த மார்பினை உடையோனே! பாடினிக்கு வரிசை அறிந்து சிறப்புச் செய்யும் வேந்தனே! நின் பகைவர், பெரும் பிழையினையே செய்தனராயினும், அதனை உணர்ந்தாராய் வந்து நின்னைப் பணிந்துநின்று திறை செலுத்தினராயின் அவரையும் பொறுத்து, அவர் தரும் அப் பொருளையும் ஏற்றுக் கொள்ளுகின்றன. ஆதலினாலே,