இரண்டாம் பத்து
55
கொள்ளை வல்சிக் கவர்காற் கூளியர்
நல்லுடை நெடுநெறி போழ்ந்துசுரன் அறுப்ப
ஒண்பொறிக் கழற்கான் மாறா வயவர்
திண்பிணி எஃகம் புலியுறை கழிப்பச்
செங்கள விருப்பொடு கூலம் முற்றிய
5
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர்
கடிப்புடை வலத்தர் தொடித்தோள் ஒச்ச
வம்புகளை வறியாச் சுற்றமோ டம்புதெரிந்
தவ்வினை மேவலை யாகலின்
10
எல்லு நனியிருந் தெல்லிப் பெற்ற
அரிதுபெறு பாயற் சிறுமகி ழானும்
கனவினுள் உறையும் பெருஞ்சால்பு ஒடுங்கிய
நாணுமலி யாக்கை, வாணுதல் அரிவைக்
கியார்கொல் அளியை
15
இனந்தோ டகல வூருடன் எழுந்து
நிலங்கண் வாட காஞ்சில் கடிந்துநீ
வாழ்தல் ஈயா வளனறு பைதிரம்
அன்ன வாயின பழனந் தோறும்
அழன்மலி தாமரை யாம்பலொடு மலர்ந்து
20
நெல்லின் செறுவின் நெய்தல் பூப்ப
அரிநர் கொய்வாள் மடங்க வறைநர்
தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த
இன்றோவன்றோ தொன்றோர் காலை
நல்லம னளிய தாமெனச் சொல்லிக்
25
காணுநர் கைபுடைத் திரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே.
பகைப்புலத்தைக் கொள்ளை யிடலாலே கிடைத்த உணவையும், வினைநோக்கி மேற்செல்லலையே விரும்பும் கால்களையும் கொண்டவர் நின் கூளிப் படையினர். அவர்தாம் கற்களைக் கொண்டதான நெடிய மலைப்பகுதிகளைப் பிளந்து,