56
பதிற்றுப்பத்து தெளிவுரை
சுரத்திடத்தே படைசெல்வதற்கான வழியினை அமைப்பர். ஒள்ளிய பொறிகளைக் கொண்ட கழல்களைக் கால்களிலே இட்டுச் செல்பவரான, முன்னிட்ட அடியைப் பின்னிடலையே அறியாதவரான நின் போர் மறவர்கள், அவ் வழியாகச் சென்று பகைவரை வெற்றிகொள்ளக் கருதுவர். காம்போடு திண்ணிதாகக் செறிக்கப்பெற்ற வாட்படையைப் புலித்தோல் உறையினின்றும் கழித்துச் செம்மை செய்வர். பகைவரது குருதியாற் சிவப்பெய்தும் போர்க்களத்தை நாடிச் செல்லுகின்ற விருப்பத்தோடு, கூலங்களுள் ஒன்றாக நிரம்பிய நிறமுள்ள செந்தினையைக் குருதியோடும் கலந்து தூவிப் போர்முரசுக்கு இயவர் நாட்பலி இடுவர். அதன் பின்னர், நீராட்டப்பெற்று வந்ததும், வார்க்கட்டு அமைந்ததுமான முரசத்தின் கண்ணிடத்தை மீளவும் ஒழுங்குசெய்வர். அதன் பின் தம் வலக்கையிலே குறுந்தடியை ஏந்தியவரான முரசு முழக்குவோர், தொடியணிந்த தம் தோள்களை ஓச்சியவராக அம் முரசினை அடித்தும் முழக்குவர். அம் முழக்கினைக் கேட்டதும், தம் கைச்சரடுகளைக் களைதலறியாத படைத் தலைவர் முதலியோருடன், அம்புகளை ஆராய்ந்தவாறு, நீயும் அப் போர்ச் செயலையே மேலும் விரும்பியவனாக இருக்கின்றனை!
நீதான் அவ்வாறு போர்வினையையே விரும்பிய உள்ளத் தினன் ஆதலினாலே, பகலில் நின் பிரிவைப் பெரிதும் ஆற்றி யிருந்தும், இரவின்கண் அரிதாகப்பெறுகின்ற துயிலிடத்துக் கனவினுள், தான் நின்னைக் காணப்பெற்றதான அந்தச் சின்னஞ்சிறு மகிழ்ச்சியினால் மட்டுமே உயிரைத் தாங்கியபடி மனைக்கண்ணே தங்கியிருப்பாள் நின் அரசமாதேவி. பெரிதான சால்பினையும், உடல் மெலிவாலே எழுகின்ற ஊரலரால் நாணம் நிரம்பி ஒடுங்கிய உடம்பினையும், ஒளி பொருந்திய நுதலினையும் உடையவள் அவள்! அவள்பால், நீதான், நின் நினைவைச் செலுத்தினா யல்லை! ஆதலின், அவளுக்கு நீதான் யாரோகாண்! நீதான் அளிக்கத்தக்கவனாவாய்!
நின்னைப் பகைத்தோர் நாட்டிலுள்ள மக்கள் அனைவருமே, அவர்தாம் பேணிக்காத்த ஆடும் மாடும் ஆகியவை எல்லாம் தொகுதி தொகுதியாகத் தம்மைக் காப்பாரின்றி நாற்புறமும் பரந்தோடிப் போகத், தாமும் ஊரூராகத் திரண்டெழுந்து, தத்தம் ஊர்களைவிட்டு அகன்று போவாராயினர். உழவுத்தொழிலைக் கைவிட்டவராக, அவரெல்லாம்