58
பதிற்றுப்பத்து தெளிவுரை
அமைத்த வழியானது சுரனை ஊடறுத்துச் செல்வதுபோல அமைந்து விளங்க என்றதாம். பொறி - அரும்பு வேலைப்பாடுகள்; கழல் - வீரக்கழல். 'ஒண்பொறிக் கழல்’ என்பது ஒள்ளியவான மறச்செயல்கள் பொறிக்கப்பெற்ற கழலும் ஆம். திண்பிணி -திண்ணிதாகப் பிடியோடு பொருத்தப்பெற்றுள்ள தன்மை. புலியுறை - புலித்தோலாற் செய்யப்பெற்ற வாளுறை. செங்களம் - குருதியாற் சிவப்புற்ற களம். எஃகம் - வாள்; 'வேல்' எனின் உறைகழித்தல் என்றது பொருந்தாது. கண்பெயர்த்தல் - கண்ணிலிடும் மருந்தைப் பெயர்த்திடுதல். மண்ணுறல் - நீராட்டப் பெறுதல். வம்பு - கைச்சரடு. சுற்றம் - படைத்தலைவர் முதலாயினோர். அவ்வினை - அழகிய தான போர்வினை.
எல் - பகற்பொழுது. 'நனி இகந்து' என்றது, பெரிதும் துயரை மறந்து ஆற்றியிருந்து என்றதாம். எல்லி - இரவுப் பொழுது. 'சிறு மகிழ்' என்றது, அவனோடு கொண்ட உறவு கனவாக மட்டுமே அமைதலால்; அதுதான் உயிர்தரித்திருக்க உதவுவதாயிற்று! அதுவுமின்றெனில் அவள் என்றோ மாய்ந் திருப்பாள் என்றதாம். ஒடுங்கிய நாணுமலி யாக்கை' என்றது, பிறர் தன் கணவனைப் பழிக்க, அது கேட்கப் பொறாதும், அதனைத் தடுக்கவியலாதும் தன் நிலைக்கு நாணிய வளாக ஒடுங்கியிருக்கும் உடல்நிலை. 'வாணுதல்’ என்றது அவளுடைய பழைய அழகினை; இதுபோது அதுதான் பசலையால் உண்ணப்பட்டுப் பொலிவழிந்திருக்கின்றது என்பதாம். அவளை இன்புறுத்தி உயிரைக் காவாது நீதான் இவ்வாறு பாசறையே இருப்பிடமாக வாழ்வதுதான் அரசமுறையோ என்பார், 'யார் கொல் அளியை?’ என்றனர்.
இனம் - ஆனினம்; அவை "தோடு அகல" என்றது, காப்பாரற்றமையால் தொகுதிதொகுதியாகத் தாமே ஊரை விட்டு அகன்றவாய் நாற்புறமும் பரந்துசெல்ல என்றதாம். ஊருடன் - ஊரவர் அனைவரும்; இஃது போர்மறவரல்லாத பிறரும் மேல்வரும் சேரலாதனின் படைவரவுக்கு அஞ்சியவராகத் தம் ஊரைவிட்டு அகன்றதான அச்சத்தன்மை கூறியதாம். நிலம் கண் வாட - விளைநிலங்கள் தம்மைப் பேணும் உழவரற்றமையாற் காய்ந்துபோக. நாஞ்சில் - கலப்பை. பைதிரம் காடுகள். பழனம் - வயலும், வயலடுத்த நீர்நிலையும். அரிநர் - கதிரரிவோர். கொய்வாள் - கதிரரி வாள்; இது வளைவானது. அறைநர் - கரும்பு வெட்டுவார். பத்தல் - எந்திரத்திலிருந்து சாலுக்குக் கருப்பஞ் சாற்றைக்