பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பத்து

61

இரண்டாம் பத்து 6 1

வயிறுபசி கூர வீயலன் வயிறுமா சிலியரவ னின்ற தாயே!

"நும் கோமான்ருன் யாரோ?” என்று என்னைக் கேட்பா யாயின், எம் கோமான், பெருங்கடல் நடுவேயிருக்கும் தீவிடத்திலிருந்தபடியே, தன்னைப் பகைத்தோரை,அவரிருந்த அவ்விடத்திற்கே சென்று வெற்றிகொண்டு, அவர் தம் காவன் மரமாகிய கடம்பினையும் அடியோடு வெட்டியழித்த கடுஞ்சினத்தையும் வலிமையையும் உடையவனகிய நெடுஞ் சேரலாதன் ஆவான். அவன் தலையிற் சூடியிருக்கும் தலைமால்ை என்றும் வாழ்வதாக! *

தனக்கு மாறுபட்டார். அவர்தம் நாட்டிடத்தே தனக்கு மாறுபாடாகச் செய்யும் பகைச்செயல்களுள், வெயிலிடத் துக் காணப்பெறும் சிறு துகளினளவுக்குச் சிறிய செயல்களை யுங்கூட, அவை அவர்கட்குப் பயன்படுமாறு விட்டுவைத்தலை அறியாதவன் அவன்! தன் கண்ணெதிரே தனக்கு அன்பரைப் போல. உவப்புக் காட்டித், தம் நெஞ்சகத்தே மலர்ந்த உவப்போடு அன்பு செய்தறியாத உட்பகை கொண்டாரது நாட்டிடத்தும், கனவிற்கூடத் தன் பகை முடித்தலாகிய செயலினைச் செய்து முடித்தலன்றி, அதனைப் பொய்த்தல் என்பதனையே அறியாதவன் அவன்!

தன்னைப் பகைத்தோர் அழிவெய்துமாறு, வெற்றிப் பெருமிதத்துடன் அவர் நாட்டினுள் தன் படையைத் தானே முன்னின்று நடத்திச் சென்று அப் பகைவரை அழித்தான். வடித்தமைத்த மணிகள் ஒலிமுழங்கும் மதயானைத் திரளா ய, பகைவரது யானைப்படைகள் எல்லாம் சேரலாதனுக்கு எதிர்நிற்க இயலாவாய் அலறிக்கொண்டே சிதறியோடின. அகன்ற பெரிய நிலப்பரப்பினையுடைய பகைவேந்தரது பெருநாடுகளை எல்லாம் வென்று அவனே கைக் கொண் டான். புலவர்கள் அவன் வெற்றிச் செவ்வியைப் போற்றிப் பாடத் தன் ஓங்கிய புகழையும் அவன் நிலைபெறச் செய்தான்.

வயிரியர் கண்ணுளர் என்னும் இருதிறக் கூத்தர்க்கும், விரிந்த தலையாட்டமணிந்த குதிரைகளையும், களிறுகளையும், தேர்களையும், தனக்கென அவற்றை வைத்துக்கொள்ளாளுய் வழங்கிஞன். காவற்காடும், ஆழ்ந்த கிடங்கும், நெடிய மதிலும், நிலைபெற்ற ஞாயிலும், அம்புக்கட்டு உடைமை யாலே எளிதிற் கடத்தற்கரிய இடைமதிலும் கொண்டு