உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

பதிற்றுப்பத்து தெளிவுரை

அமைந்த பகையரசரின் அரண்களைக் கடந்து உட்புகுந்து, அவற்றை எல்லாம் அழித்தான். அவ்விடங்களை எரியிட்டும் கொளுத்தினான். அதன்பின்னரே தான் உணவு கொள்ளலையும் செய்தான். சோறு சமைத்தலால் அல்லாமல், ஊரைச் சுடுதலாலே எழுந்த புகையானது படிந்த, பகைவரை அழித்த வெற்றிச் செருக்கினாலே விரிந்து மலர்ந்த மார்பினை உடைய வனாகவும் அவ்விடங்களிலே அவன் திகழ்ந்தான்!

என்னைச் சார்ந்தவர்களுக்கும், என்னைப்போலவே அவனை நாடியவராக வந்திருந்த பிற பாணர்களுக்கும், மற்றும் அவனை நாடியவராக வந்திருந்த பிறபிற கலைஞர் யாவர்க்கும், அவர்தாம் எத்தன்மையராயினும், அப்பரிசில் மாக்கள். தாம் பரிசில் பெறக் கருதிய கலைதுறையிலே வல்லமை அற்றவராயினும், அவற்றையெல்லாம் ஆராயானாய்த், தன்பால் வந்து இரந்தோர்க்கெல்லாம் வாரிவாரிக் கொடுத் தலையே தனக்குரிய கடமையாக விரும்பியவன், செம்மை நிறம்பாத நெஞ்சினனான சேரலாதன் ஆவான்!

நிலைபெற்ற உயிரினம் அனைத்துமே அழிந்து போமாறு பலவான ஆண்டுகளாகக் குளிப்பைத் தருதலையடைய மேகங்கள் மழையினைப் பெய்யாவாய் மாறுபட்டுப் போயினும், தான், தன்னை வந்திரந்த வறியவர்க்கு, அவர்தம் வயிற்றிடத்தே எழுகின்ற பசித்தீயானது மிக்கெழுமாறு குறைவாகக் கொடுத்தல் என்பதனையும் அறியாதவன் அவன்!

இத் தன்மையனாகிய சேரலாதனைப் பெற்றெடுத்த அவன் தாயாகிய வேண்மாள் நல்லினி தேவியார், தன் வயிறு என்றும் குற்றமில்லாதவளாக, என்றும் நிலைபெற்றுப் புகழுடன் விளங்குவாளாக!

சொற்பொருளும் விளக்கமும் : 'வினவின்' என்றது, வினவியவனின் கூற்றை எடுத்து மொழிந்ததாம். இருமுந்நீர் - பெருங்கடல். துருத்தி - தீவு. தலைச்சென்று - மேற்சென்று செயலை முடித்து. தடிதல் - வெட்டுதல். முன்பு - வலிமை. கண்ணி - தலைமாலை; அதனை வாழ்த்தியது, அது வெற்றி பெற்ற பின்னர்ச் சூட்டிய அடையாள மாலை என்பதனால்.

மாறிய வினை - மாறுபட்ட செயல்; பகைவினை. வாய்ப்பு - மெய்யாகப் பயன்படல். தன்னை நேராகப் பகைத் தோரையும், நேரில் அன்புகாட்டி உள்ளத்தே பகைகொண்டு மறைவாகப் பகைச்செயல்களில் ஈடுபட்டோரையும் ஒருங்கே அழித்தலில் தவறாதவன் சேரலாதன் என்பதாம். இதனாற்