பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்
பாலைக் கௌதமனார் பாடியது
மூன்றாம் பத்து
பதிகம்
[பாடியவர் : ஆசிரியர் பாலைக் கௌதமனார் பாடப் பட்டோன் : பல்யானைச் செல்கெழு குட்டுவன். பாடிப் பெற்ற பரிசில் : நீர் வேண்டியது கொண்மின்' என்றான் குட்டுவன். “யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகவேண்டும்" என்றனர் கௌதமனார். குட்டுவன், பார்ப்பாரிற் பெரியோரை 'அதற்குரிய வழி யாது?’ எனக் கேட்டு, அவர் கூறியபடியே ஒன்பது பெருவேள்விகளை இயற்றுவித்தான். பத்தாம் வேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் அங்கிருந்தார் காணாராயினர். அவர்கள் தாம் விரும்பியவாறே சுவர்க்கம் புகுந்தனர். இவன் அரசு வீற்றிருந்த காலம் இருபத்தைந்து யாண்டுகள்.]
இமைய வரம்பன் தம்பி அமைவர
உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ
அகப்பா வெறிந்து பகற்றி வேட்டு
மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக்
கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்துக்
5
கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி
இருகடல் நீரும் ஒருபகல் ஆடி
அயிரை பரைஇ ஆற்றல்சால் முன்போடு
ஒடுங்கா நல்லிசை உயர்ந்த கேள்வி
நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த
10
ப-5