பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் பத்து

67

முன்ரும் பத்து 67

துதல். அகப்பா - ஓர் வலிய அரண் முதியர் - பெரியோ (அறிவாலும் வயதாலும்). மண்வகுத்தல் - நிலத்தை அளந்து பகுத்து அவரவர்க்கு உரிமை செய்தல் புணர்நிரை - பொருந்திய நேரான வரிசை. நீட்டி - நெடிதாக விளங்கச் செய்து. கீழ்கடல் மேல்கடல் என்னும் இரண்டனுக்கும் இடையே யானைகளை ஒன்றன்பின் ஒன்ருக நெடுகிலும் நிற்கச் செய்து, இருகடல் நீரையும் கொணர்ந்து, அயிரைமலைக் காளிக்குத் திருமுழுக்காட்டிப் போற்றியவன் என்றனர். முன்பு - வல்லமை, இப் பெருஞ்செயலால் இவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன்' என்னும் பெயரைப் பெற்றனன்; குட்டுவன் - குட்டநாட்டிற்கு உரியவன்; இவன் இயற்பெயர் தெரிந்திலது, அது இதுவுமாகலாம். கேள்வி - கேள்விஞானம்; வேதங்களைப் பாடம் கேட்டுப் பெற்ற வேதஞானம்; பாரதாயனர் பாரத்துவாசர் மரபில் தோன்றிய பார்ப்பன முனிவர். முந்துற - முற்பட்டுச் செல்ல காடுபோதல் . துறவு பூண்டு, காட்டிற்குத் தவமியற்றப் போதல்; அரசை மகனுக்கு அளித்து ஆன்மநலம் கருதித் துறவு பூண்டு செல்லல்.

'உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ' என்ற தல்ை, இடையில் அது சேரரின் கையிலிருந்து சென்றதாதல் வேண்டும். 'மதியுறழ் மரபின் முதியர்' என்றது பாண்டி யரைக் குறித்ததுமாகலாம். அவரைப் போலவே இவனும் நிலத்தை அளந்து ஒழுங்கு செய்து அரசிறை விதித்தான் எனலாம். இருகடல் நீரும் ஒருபகல் ஆடி' என்றது, இவனே நீராடித் தன் பெருமையை உலகுக்கு உணர்த்தியதாகவும் சுொள்ளப்படும். உருகெழு மரபின் அயிரை மண்ணி, இரு கடல் நீரும் ஆடினேன்' எனச் சிலம்பு கூறுவதும் ஒப்பு நோக்குக- (சிலம்பு. 28). ஆரிய முனிவர்கள் இவனிடம் செல்வாக்குப் பெற்றிருந்ததும், அவருட் சிலர் தமிழ்ச் செய்யுள் செய்யும் அளவு புல்மை பெற்றிருந்ததும் இதல்ை அறியப்படும் செய்திகள்.

சேர மன்னருட் சிலர் தம்முடைய ஆன்ம விசாரங் கருதிப் பார்ப்பன அறிஞரைக் குருவாக ஏற்றிருந்தனர் என்பதும், அவர்கள் மூலம் வடமொழியறிவும், வடமொ யாளரின் வேள்வியும் ஞானமும் பற்றிய அறிவும் பெற்று விளங்கினர் என்பதும் இதல்ை அறியப்படுகின்றது.