68
பதிற்றுப்பத்து தெளிவுரை
21. அடுநெய் ஆவுதி ?
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர் : அடுநெய் யாவுதி. இதனாற் சொல்லியது: அவன் நாடுகாவற் சிறப்புச் சொல்லி வாழ்த்தியது.
[பெயர் விளக்கம் : இவன் பல வேள்விகளைச் செய்தவன். இவன் விருந்தினரை உபசரித்தலையும் ஒரு வேள்வியாக்கி, 'ஆள்வினை வேள்வி' என்று ஒரு துறையாகக் கூறினர். இந்த நயம்பற்றி இப் பாடலுக்கு இது பெயராயிற்று.]
சொற்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சமென்
றைந்துடன் போற்றி அவை துணையாக
எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக்
காலை யன்ன சீர்சால் வாய்மொழி
உருகெழு மரபிற் கடவுட் பேணியர்
5
கொண்ட தீயின் சுடரெழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும்பெயர் ஆவுதி
வருநர் வரையார் வார வேண்டி
விருந்துகண் மாறா துணீஇய பாசவர்
ஊணத் தழித்த வானிணக் கொழுங்குறை
10
குய்யிடு தோறும் ஆனா தார்ப்பக்
கடலொலி கொண்டு செழுநகர் நடுவண்
நடுவண் எழுந்த அடுநெய் யாவுதி
இரண்டுடன் கமழும் நாற்றமொடு வானத்து
நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி
15
ஆர்வளம் பழுனிய வையந்தீர் சிறப்பின்
மாரியங் கள்ளின் போர்வல் யானைப்
போர்ப்புறு முரசம் கறங்க வார்ப்புச் சிறந்து
நன்கலந் தரூஉம் மண்படு மார்ப!
முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர்
20
புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பிக்
கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறூஉம்