பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பதிற்றுப்பத்து தெளிவுரை

மாளிகை. மை - புகை. அடும் நெய்யாகிய ஆவுதிப் புகை இடையருதே எழுந்து கொண்டிருக்கும் என்க. குட்டுவன் வேத வேள்வியும் இயற்றுவித்தர்ன்; விருந்து புரந்தரலாகிய வேள்வியும் இயற்றுவித்தான்; இரண்டின் வேள்விப் புகை யும் ஒன்றுகூடி ஒருங்கெழுந்து அவனரண்மனையிற் பரவின என்பதாம்.

'கடவுளும் விழைதக' என்றது, அக் கடவுளரும் அதன் சிறப்பை வியந்து, சேரனுக்கு வரந்தரலை விரும்பி வந்து அவன் மாளிகையை அன்டந்திருக்க என்றதாம்; கேள்வித் தீயில் இடப்பெறும் அவியுண்வைப் பெறுதலே விரும்பி அவர் வருவர் என்றும் கொள்க. தீயில் நெய்யும் ஊனும் சொரிந்து இயற்றும் வேள்விப் புகையும், சட்டியில் ஊனும் நெய்யும் இட்டுப் புலாலுணவு தாளிக்கும் தாளிதப் புகையும் ஒரே மணத்தைச் செய்தனவென்னும் நயத்தை அறிந்து இன்புறுக. 'ஆர்வளம் பழுனிய' என்றது, கொடுக்கக் கொடுக்கக் குறையாத நல்வளம் நிறையப் பெருகி முதிர்ந்த' என்றதாம். கடவுளர் நாற்ற உணவினர். ஆதலின் இரண்டின் கலந்த நாற்றத்தையும் விரும்பி உண்டனர் என்பதும் கொள்க. 'மண்படு மார்ப - பகைவர் நாட்டு மண்படும் மார்பினன்", எனக், குட்டுவன் அவர் நாட்டைத் தான் கொண்டதுபற்றிக் கூறியுதாம்.

முல்லைக் கண்ணி - முல்லைப்பூவாலான தலைமாலை, முல்லை நிலத்தாரான அவர்தம் நிலத்துக்குரிய பூவினைக் கண்ணி யாகத் தொடுத்து அணிந்தனர் என்க. பல்லான் - பல லாகிய ஆநிரைகள்: பலவென்பது பலவகைச் சாதிகளைக் குறிக்கும். வியன்புலம் - பரந்த நிலம். பரப்பி . பரவலாக மேயவிட்டு. கல் - முனை கூரிய கல். கடம் - காட்டுப்பகுதி. "கடத்திடைக் கதிர்மணி' உண்டென்பார், கோவலர் அதனைப் பெறுவதனைக் கூறினர். செருப்பு - செருப்புமலை. குவியற் கண்ணி - வெட்சிமுதல் வாகை ஈருகிய போர்க் கண்ணி. மழவர் - இவர் கொங்கு நாட்டு மறவருள் ஒரு சாரார்: குதிரைப் போரில் வல்லவர்; இவர்க்கு மெய்ம்மன்ற யாயது, இவர்க்குப் பிறரால் வரவிருந்த துயரைப் போக்கிக் காத்தது. மெய்ம்மறை கவசம்: மெய்யை மறைப்பது.

பல்ப்யம் . பலவகைப் பழங்கள். தpஇய. பொருந்திய. பயம், பயனுமாம்; அவை பயனுடைய மரம், ச்ெடி, கொடி % தலியன. அயிரை, மலையையும் ஒருவகை மீனையும் குறிக்கும். காக்கின் பரிவேட்புக்கு அஞ்சுவது அயிரை மீன் அஞ்