பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் பத்து

75

மூன்ரும் பத்து 75

நாடுகெழு தண்பணை சீறினை யாதலின் குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றிப் பாயிருள் அகற்றும் பயங்கெழு பண்பின் ஞாயிறு கோடா கன்பகல் அமயத்துக் கவலை வெண்ணரி கூஉமுறை பயிற்றிக் 35 கழல்கட் கூகைக் குழறுகுரற் பாணிக் கருங்கட் பேய்மகள் வழங்கும் பெரும்பா ழாகுமன் அளிய தாமே.

தெளிவுரை : இவ்வுலகத்தே, அறந்தெரிந்து செலுத்து வதற்கு உரியதான அரசனது ஆணைச்சக்கரத்திற்கு அளவு கடந்த சினமும், அளவுகடந்த காமமும், மிக்க கண் ளுேட்டமும், பேர் அச்சமும், பொய்ச் சொல்லும், அன்பு மிகவும் உடைத்தாயிருத்தலும், குற்றவாளியரைக் கடுமை யாகத் தண்டித்தலும், இவை போன்ற பிறவும் தடைக் கல்லாக நிற்பனவாகும். ஆகவே, இத் தீமைகளெல்லாவற் யும் நம்மை நெருங்காதபடிக்கு நீக்கியவராக, நன்மையான வற்றையே மிகவும் செய்து, நாட்டு மக்கள் எல்லாரும் தம் போற் பிறரை வருத்தாமலும், பிறருக்கு உரித்தான பொருளைத் தாம் விரும்பாமலும் குற்றம்ல்லாத அறிவுடைய வராகச் செவ்வையாக நடப்பவர்களாய்த், தம்பால் அன்பு செய்து வாழ்கின்ற துணைவியரைப் பிரியாமல், தம்மை நாடி வந்தோருக்குத் தம்மிடமுள்ளதைப் பகுத்து உண்டு, முதுமை பெற்ற யாக்கையும் நோயும் இல்லாதவராய்த் தம் வானளைக் கழிக்குமாறு, கடலும் காடும் பலவான பயன் களையும் தந்து உதவ, நெடிது காலம் ஆட்சி செலுத்திய வரான, அறிவும் ஆற்றலுமுடையவரான பேரரசர்களின் வழித்தோன்றலே!

இரும்பாற் செய்த குந்தாலியாலே திண்ணிய பிணிப்பை யுடைய வன்னிலத்தை உடைத்ததுத் தோண்ட, அண்டுச் சிதறிற்ைபோலச் சிறிதே ஊறிய நீரினையுடைய குழிகளில், கயிறுகட்டி நீரைச் சேந்தும் குறுகிய முகவையை நெருங்கச் சூழ்ந்து மொய்த்து நிற்கும் பசுக்களையுடைய, கொங்கரது நாட்டை வென்று தன்னட்டோடு அகப்படுத்திக் கொண்ட, வேல்வீரர் நிரம்பிய தானைப் பெருக்கத்தையுடைய, பகை வர்க்கு அச்சத்தை விளைவிக்கும் தோன்றலே!

தலையாட்டத்தால் பொலிவுற்று விளங்கும் குதிரைகள்; அணிகளால் அழகுற்றுத் தோன்றும் களிறுகள்: தேர்ச்சீலை