உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

பதிற்றுப்பத்து தெளிவுரை

கள் விரிக்கப்பெற்று அழகுடன் விளங்கும் தேர்கள்: போர் புரிதற்கென முற்பட்டாரான போர் விருப்பத்தைக் கொண்ட போர்மறவர்கள் என்னும், இந்நால்வகைப் படையோடும் கூடியவனாக நீதான் பகைவர் நாட்டுட் புகுந்தனை.

பரந்து அகன்ற வெளியிடத்தே, உயர்ந்த நிலையினை உடையதான கணையமரம் செறிக்கப்பெற்ற கோட்டை வாயில் அமைந்திருந்தது. அவ்விட்த்தே, எந்திரவிசையுடன் கூடிய விற்கள் பொருத்தப்பெற்ற, சிறந்த சிறப்பினையுடைய ஐயவித்துலாம் தொங்கவிடப் பெற்றிருந்தது. அப் பறந்தலையை அடுத்ததாகக் காவற்காடும் ஆழ்ந்த கிடங்கும் விளங்கின. நெடிய மதிலின் உட்புறத்தே நிரல்பட அமைந்த பதணங்கள் விளங்கின. தலைமையும் பெருமையுமுடைய 'அகப்பா' என்னும் அவ்வரணை அழித்து நீ தான் வெற்றி கொண்டனை. பொன்னாற் செய்த உழிஞை மாலையினையும் குடிக்கொண்டனை. இத்தகைய, போர்க்களத்தே வெற்றியே பெறுதலையுடைய குட்டுவனே!

ஏற்றுரி போர்த்துள்ள பறையை அறைந்து மக்களை வருவித்து மிக்குவரும் புனலைத் தடுத்து நிறுத்துவோரும், புதுநீர் விளையாட்டின்போது எழுகின்ற ஆரவார ஒலியினலே அம்பேவற் பயிற்சி செய்வார் எழுப்பும் ஒலியை அடக்கு வாரும், ஒலிகளையுடைய விழாக்களிலே திரண்டு கூடி மகிழ்வோருமாக, புதிய வருவாயினையுடையதாகத் திகழ்வன பகைவர் நாடுகள். அந் நாடுகளிலுள்ள தண்மை பொருந்தி விளைநிலங்கள் எல்லாம், நீ தான் அவர்பாற் சீற்றங் கொண்டனை யாதலினாலே பாழ்நிலங்களாக மாறிப்போகும். மேற்குத்திசையிலே சென்று மறைந்து காலையில் மீண்டும் கிழக்குத்திசையிலே எழுந்து தோன்றி, இந் நிலவுலகிற் பரவியிருந்த இருளைப் போக்கும் பயன் பொருந்திய பண்பினை யுடையது ஞாயிறு. அது ஒருபக்கமும் சாயாமல் நிற்கின்ற உச்சிப்பொழுதாகிய நண்பகற் காலத்தே, கவர்ந்த வழிப்பக்கங்களில் நின்றுகொண்டு வெண்மையான நரிகள் முறையிட்டுக் கூவுதலை மேற்கொள்ளும். அக் குரலுக் கேற்பத் தாளமிடுதலைப்போலப் பதுங்கிய கண்களையுடையவான கூகை குழறா நிற்கும். கருங்கண்களை யுடையவளான பேய் மகள் திரிந்துகொண்டிருப்பாள். இத்தகைய பெரிதும் பாழ்பட்ட நிலங்களாக, அம் மருதவள நிலங்கள் மாறிப் போகும். அவைதாம் இரங்கத்தக்கன, பெருமானே!

சொற்பொருள் : கண்ணோட்டத்தின் முன்னின்ற 'கழி' என்னும் உரிச் சொல்லைச் சினன் முதலியவற்றிற்கும் கூட்டிப்