பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ரும் பத்து 77 .

பொருள் கொள்க. அரசவினைக்கண் இவை யாவும் வேண்டு வதே! எனினும், இவை அளவிறப்பின் அதனுற் கேடும் வந்து சூழும் என்பதாம். அச்சம் உடையார்க்கு அரணில்லை' (குறள் 534) என்பதனல், அச்சத்தின் தீமை பெறப்படும்; அது அரசனின் உளத்திண்மையைச் சிதைத்தலின் குற்றமா யிற்று, இஃதன்றி அஞ்சுவதஞ்சல் அறிவார் தொழில்'என்றத ஞல் அஞ்சவேண்டுமவற்றுக்கு அஞ்சுதல் விலக்கப்படுவதன்று என்பதும் அறிதல்வேண்டும். தெறல் - தண்டித்தல். அறம் தெரி திகிரி - அறம் நிலைபெறப் பொருட்டாக ஆராய்ந்து செலுத்தப் பெறும் அரசமுறைமை. வழியடை - தடை. சேணிகந்து - நெடுகிலும் கைவிட்டு ஒதுக்கி. மை - குற்றம். பாத்து - பகுத்து. ஊழி - நெடுங்காலம். உரவோர் - அறிவும் ஆற்றலும் உடையோர்; குட்டுவனின் முன்னேர். உம்பல் - வழித்தோன்றல், அரசு முறை கோடாது நடைபெறுதலால் மக்களும் நெறிபிறழாதாராய் ஒழுகுவர் என்பார், அவர்தம் ஒழுக்க நெறியையும் காட்டினர். இவை இரண்டும் பொருந்த ஆட்சி செய்தவர் குட்டுவனின் முன்னேர் ஆவர்.

பொன் . இரும்பு; கரும்பொன். கணிச்சி , குந்தாலி;

பாறையுடைக்கும் கருவி. ஆ - திண்மையான் பிணிப் டைய பாறை, பண்புத்தொகைப் த்துப் பிறர்

ள்ே.ாந்த் *ಾ. பிணி . ಜಿ” முதிே தொழிற்பெயர் உடைத்து - உடைக்க சிரறுதல் - சிதறுதல். சில சிறிது; சின்மை. சிறுமைப் பொருளது. பத்தல். குழி: சிறு கிணறு. மிக ஆழத்து அமைத்து சிறிதளவே நீருள்ள கிணறு; ஆதலின் குறுமுகவையிற் கயிறுகட்கு நீரைச் சேந்த முற்படுங்காலத்துப் பலசமயங்களில் வெறுங் குறுமுகவையே மேலே வர, நீர்க்கு அவாவி நிற்கும் ஆணினம் அதனை மறைத்துக்கொண்டே போய் நிற்கும் என்க். குறுமுகவை' என்ற தல்ை, நெடுங்கயிறு என்று கொள்க. "கொங்கர் . கொங்குநாட்டார்; இவர் நாடு சேரநாட்டைச் சார்ந்து விளங்கியது; சில சமயங்களில் பாண்டிநாட்டாரும் கொங்கு நாட்டை ஆண்டனர். வேல் கெழு தானே - வ்ேன்மறவர்ை யுடைய தானே. கொங்கையும் குட்டுவன் தன் ஆட்சிக்கிழ்க் கொண்டிருந்தான் என்பதாம்.

உளை - தலையாட்டம், இழை வெ ற் றி ப் பட்டம், பொன்னரிமாலை முதலியன. வம்பு - தேர்ச்சீலை, எதிர்ந்த . முற்படுகின்ற. புகல் விருப்பம்; அது போரியற்ற வேண்டு