மூன்றாம் பத்து
79
துருத்திக் கொண்டிருக்கும் கண். கூகை - பேராந்தை; கோட்டான். பாணி - தாளம். வழங்கும் - திரியும். நின்னைப் பகைத்தோன் வளநாட்டுப் பகுதிகள், நின்னால் அழிக்கப் பெற்றவாய், நரியும் கூகையும் பேய்மகளும் நண்பகற் போதிலேயே திரிதலையுடைய பெரும் பாழிடங்களாகும்; ஆகவே, அவைதாம் எம்மால் இரங்கத்தக்கன என்பதாம்.
23. ததைந்த காஞ்சி !
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : ததைந்த காஞ்சி. இதனாற் சொல்லியது : சேரனது போர்மற மாண்பு ஆகும்.
[பெயர் விளக்கம் முதலியன : மகளிர், காஞ்சியினது தளி ரும் முறியும் தாதும் பூவும் கோடலாற் சிதைவுபட்டுக் கிடக்கின்ற நிலையைக் கூறிய சிறந்த காட்சிநயத்தால் இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது. துறை விள்க்கம் முற்பாட்டில் கூறப்பெற்றது. போரிடற்கு எழுவானது செயலைப் பகைவரது அழிவை மேலிட்டுக் கூறிப் போற்றியதனக் காண்க.]
அலந்தலை உன்னத் தங்கவடு பொருந்திச்
சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து
நிலம்பை தற்ற புலங்கெடு காலையும்
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்
மன்றம் போந்து மறுகுசிறை பாடும்
5
வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப்
பொன்செய் புனையிழை யொலிப்பப் பெரிதுவந்து
நெஞ்சுமலி யுவகையர் உண்டுமலிந் தாடச்
சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும்
போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
10
நின்னயந்து வருவேங் கண்டனம் புன்மிக்கு
வழங்குநர் அற்றென மருங்குகெடத் தூர்ந்து
பெருங்கவின் அழிந்த வாற்ற வேறுபுணர்ந்து
அண்ணன் மரையா அமர்ந்தினி துறையும்
விண்ணுயர் வைப்பின் காடா யினநின்
15