பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் பத்து

83

மூன்ரும் பத்து - 83

'முருக்கு தாழ்பு எழிலிய' என்பதற்கு, முள்ளு முருக்கின் பூக்கள் நீரிலே தங்குதலாலே அழகுபெற்ற எனவும் நெருப்பு உறழ் அடைகரை' என்பதற்கு, நெருப்பை யொத்த நீரை ஆடைந்த கரை எனவும் பொருளுரைப்பர். இவையும் பொருந்தும்.

24. சீர்சால் வெள்ளி !

துறை : இயன்மொழி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு செந்துக்கு. பெயர் : சீர்சால் வெள்ளி. இதற்ை சொல்லியது : குட்டுவனின் பெருமையும் கொடைச் சிறப்பும்.

(பெயர் விளக்கம் முதலியன : சேரனின் இயல்புகளாயின பலவற்றையும் சொல்லி வாழ்த்தலின் இயன்மொழி வாழ்த்து ஆயிற்று. 'வெள்ளி வறிது வடக்கு இறைஞ்சுதல் மழைவருங் , குறிப்பு. அதுவும் பொய்யாய்ப் போனது என்பவர், அதனை யடுத்துக் குட்டுவனின் சோறு அளிக்கும் கொடைத்திறனைக் கூறி வியந்தனர். வறிது வடக்கு இறைஞ்சிய' என்னும் அடைச்சிறப்பால் இப் பாட்டு இப் பெயர் பெற்றது.)

நெடுவயின் ஒளிறு மின்னுப்பரங் தாங்குப் புலியுறை கழித்த புலவுவாய் எஃகம் ஏவல் ஆடவர் வலனுயர்த் தேந்தி ஆரிரண் கடந்த தாரரும் தகைப்பில் பீடுகொள் மாலைப் பெரும்படைத் தலைவ! 5

ஒதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றலென் ருறுபுரிந் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிக் தொழுகி ஞாலம்;கின்வழி யொழுகப் பாடல்சான்று நாடுடன் விளங்கும் நாடா கல்லிசைத் # 10 திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ!

குலையிழி பறியாச் சாபத்து வயவர் அம்புகளை வறியாத் தூங்குதுளங் கிருக்கை