உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்றாம் பத்து

87

 உண்மர் - உண்ணற்குரியன உண்போர். தின்மர் - தின்னற்குரிய தின்போர்; தின்னல் பற்களாற் கடித்து விழுங்கல். வரைகோள் - கொள்ளும் எல்லை. குரைத்தொடி - ஒலிக்கும் பூண்; உலக்கை ஓச்சும்போது உரலிற்பட்டு ஒலி முழக்கும் பூண்; 'மழுகிய' என்றது ஓயாது குற்றுதலால். வயின் - இடம்; இங்கே சமையலறை. அடை - இலை. 'சேம்பு எழல்' கொதிக்குங் காலத்துக் கிழங்கு மேலெழுந்து துள்ளல்: இதன் பின்னரே அரிசியிடுவர். எஃகு - வாள். வாடாச் சொன்றி - குறைவற்ற உணவு. கதிர் - கதிரவன். வறிது - சிறிது. இறைஞ்சுதல் - சாய்தல்; இது கார்காலத் தொடக்கத்து நிகழ்வது. 'பயங்கெழு பொழுது' - மழையாகிய பயனைத் தருதற்குப் பொருந்திய பிற கோள்நிலை அமைந்த பொழுது, கலிழும் - சொரியும். கருவி - தொகுதி. கையுற - நாற்றிசையும் வனத்தே பொருந்த. புரைஇய - காத்தற் பொருட் டாக. கொண்டல் - கீழ்காற்று. கமஞ்சூல் - நிறைசூல். மாமழை - கார்மேகம்.

25. கானுணங்கு கடுநெறி!

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணமும், சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்துக்கும். பெயர் : கானுணங்கு கடுநெறி. இதனாற் சொல்லியது : குட்டுவனின் வென்றிச் சிறப்பு.

[பெயர் விளக்கம் முதலியன : நீ தேரோட்டிய பகைவர் நாடு இவ்வாறு அழிந்ததென எடுத்துச்செலவினை மேலிட்டுக் கூறியமையால், வஞ்சித்துறைப் பாடாண் ஆயிற்று. 'மாவடிய' எனத் தொடங்குவது முதலாகிய மூன்றடிகளும் வஞ்சியடிகளாதலான் வஞ்சித்தூக்கும் ஆயிற்று. மழை இல்லாது போயினதால் வானம் வெப்பமிகுதியினை உடையதாய்த் தீய்ந்த கடிய வழி என்று கூறிய சிறப்பால் இப் பாட்டு இப்பெயரைப் பெற்றது.]

மாவாடியபுலன் நாஞ்சில்ஆடா
கடாஅஞ்சென்னிய கருங்கண்யானை
இனம்பரந்தபுலம் வளம்பரப்பறியா
நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி
நீ, உடன்றோர் மன்னெயி றோட்டி வையா 5