பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*.

மூன்ரும் பத்து 89

செல்ல நீ நெடுந்தேர் ஒட்டினை என்று கொள்க. அகைப்ப . ஒப்ப. பிறர் - பகைவர். இனி அந்நாடு அடைந்த பாழ் நிலையைக் கூறுகின்றனர். ši

கடுங்கண் - கொடிய தாகிய சினம். நாஞ்சில் - கலப்பை. வளம் பரப்பு அறியா - வளத்தை மிகுதியாகத் தருதலை ஒழிந்தன. உடன்ருேர் . சினங்கொண்டோர். மன் எயில் - நிலைபெற்ற கோட்டை. தோட்டி - காவல்: மதில் அழிந்து பாழாயினமையின் காவல் வேண்டா நிலை .ெ ப ற் றது. கடுங்கால் - பெருங்காற்று. ஒற்றல் - மோதியடித்தல். சுடர் - தீக்கொழுந்து. சிறந்து - மிகுந்து. உருத்து சினந்து. பசும் பிசிர் - பசிய பிசிர், தீப்பற்றி எரியுங்காலத்துக் காற்றில் மேலே பரந்து செல்லும் துகள்கள். ஒள் அழல் - மிக்க தீ,

ஆடிய - கொளுத்திய மருங்கு - பக்கம்.

26. காடுறு கடுநெறி !

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும், தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்துக்கும். பெயர் : கா டு று கடுநெறி. இதற்ை சொல்லியது : குட்டுவனின் வென்றிச் சிறப்பு.

(பெயர் விளக்கம் முதலியன : புலமானது நெருஞ்சி படர்ந்து காடாய்ப் போனது என நெறியின் பாழடைந்த தன்மையைக் கூறிய சிறப்பால் இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது. நற்புலம் காடுற்றது எனக் குட்டுவனின் பகைவர் நாட்டழிவினை, அவன் எடுத்துச் செலவின்மேலிட்டுக் கூறின மையால், இது வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு ஆயிற்று. தேர் பரந்த" என்பது முதலாக வரும் மூன்றடியும் வஞ்சியடி யாகலான் வஞ்சித்துக்கும் ஆயிற்று.)

தேஎர்பரந்தபுலம் ஏஎர்பரவா

களிருடியபுலம் காஞ்சிலாடா மத்துரறியமனை யின்னியமிமிழா ஆங்குப், பண்டுகற் கறியுநர் செழுவுளம் கினைப்பின் நோகோ ப்ானே நோதக வருமே 5