92
பதிற்றுப்பத்து தெளிவுரை
சுறுதியையும் இழந்தவராக 'காலத்தின் பண்பு இது போலும்!' எனக் க்ருதி வருந்தி நைவாராயினர் என்பதாம்.
முருகு - முருகப் பிரான். உடன்று . வெகுண்டு. கறுத்த - சினங்கொண்டு சென்று அழித்த. கலியழி மூதூர் - ஆரவாரம் அழிந்த பழைய ஊர்: ஆரவாரம் அழிதலாவது மக்கள் ஆழிந்தும் வளமை கெட்டும்பாழுற்றதனால்: இது முருகனைச் சினந்து பகைத்ததனாலே, அவன் படைஞரால் வந்துற்ற நிலை. உரும்பில் - பிறரால் நலிவுபட்டு மனக் கொதிப்புப் படாத வன்மை; உரும்பு - வெம்மை. 'திருந்து தொழில் வயவர்' என்றது. அவர்தாம் போரியற்றத் தகுதியிலாரை யாதும் துன்புறுத்தலைச் செய்யாதே, அறப் போரியற்றும் தொழில்முறை உடையவர் என்பதனால்.
27. தொடர்ந்த குவளை !
துறை : செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : தொடர்ந்த குவளை. இதனால் சொல்லியது : குட்டுவன் தன் நாட்டினைக் காத்து வந்த நல்ல சிறப்பு.
[பெயர் விளக்கம் : அரசனைப் புகழ்தற்கண் வந்த பாடாண் பாட்டாய்ச் செந்துறையில் அமைந்தது இது. பகையரசரின் நாட்டது அழிவைக் கூறுகின்ற வகையானே குட்டுவனின் போராண்மையையும் வாழ்த்தினர். ஆண்டுகள் தோறும் இட்டு ஆக்க வேண்டாது, தொண்டு இட்டதே ஈடாக எவ்வாண்டிற்கும் தொடர்ந்துவரும் குவளை எனக் குறிப்பார், 'தொடர்ந்த குவளை' என்றனர். இந்தச் சிறப்பாலே இப் பாட்டிற்கும் இது பெயராயிற்று.]
சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலின்
தொடர்ந்த குவளைத் தூநெறி யடைச்சி
அலர்ந்த வாம்பல் அகமடி வையர்
சுரியலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி
அரிய லார்கையர் இனிதுகூ டியவர்
5
துறைநணி மருத மேறித் தெறுமார்
எல்வளை மகளிர் தெள்விளி யிசைப்பிற்