பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் பத்து

93

மூன்ரும் பத்து 9.3

பழனக் காவிற் பசுமயி லாலும் பொய்கை வாயிற் புனல்பொரு புதவின் நெய்தன் மரபின் கிரைகட் செறுவின் 10 வ்ல்வா யுருளி கதுமென மண்ட அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப நல்லெருது முயலும் அளறுபோகு விழுமத்து சாகாட் டாளர் கம்பலை யல்லது

பூச்ல் அறியா நன்னட்டு 15 இயானர் அருஅக் காமரு கவினே.

தெளிவுரை : ஒளி பொருந்திய வளையல்கள்ை அணிந்தவ ரான இளமகளிர், இடையறவில்லாதே தொடர்ந்து மலர்ந் திருக்கும் வேளையினது முழுப்பூவைச் சேர்த்து, ஆம்பலின் மலர்ந்த பூக்களை அவற்றின் இடையிடையே அமையுமாறு வைத்துத் தொடுத்த தழையுடையின் உடுத்தவராகச் சென்று, சுரிந்த தலைமயிரிற் பூவால் தொடுக்கப்பெற்ற கண்ணியைச் சூடியவராகக், கள்ளுண்ணும் இயல்பினராக, அவர்கள் இனிதே கூடியிருக்கும் நீர்த்துறைக்கு அணித்தாக வுள்ள மருதமரத்தின் மேலாக ஏறிநின்று நெற்கதிர்களைக் கொய்யவரும் புட்களை ஒட்டுதற்காக விளிக்குரலெடுத்து இசைப்பார்கள். வயலருகேயுள்ள பொழில்களில் தங்கியிருக் கும் பசுமை நிறமுடைய மயில்கள் அவ் விளிக்குரலை அவர் இசைக்கக் கேட்டதும், ஆடலேச் செய்யத் தொடங்கும். அதனைக் கண்டு மக்கள் செய்யும் ஆரவாரமும்

பொய்கை வாயிலிடத்தேயுள்ள, புனலாலே தாக்கப்படும் கதவின்வழிக் கசிவு ஒழுகிச்செல்லும் கால்களிற் பூத்திருக்கும் நெய்தற்பூக்களை ஊதும் முறைம்ையினை உடையவாய், நிரை நிரையாக ஆரவாரித்துச் செல்லும் வண்டினம் நிறைந்த வயலிடத்துச் செல்லும் வலிய வாயையுடைய வண்டிச் சக்கரமானது, சேற்றினிடத்தே பட்டுச் சட்டென அழுந்திவிட, அவ் வண்டியைச் செலுத்துவோர், தம் இருக்கையினின்றும் துள்ளிக் கீழே குதித்தவராக, எருதுக்ளை உரப்பிச் செலுத்த, அந் நல்ல எருதுகளும் முயன்று வலித்து அச் சேற்றுப் பகுதியைவிட்டு வண்டியை இழுத்துப் போகும். அவ் வருத்தத்திடையே, அவற்றை ஊக்குமாறு வண்டியைச் செலுத்துவோர் செய்யும் ஆரவாரமும் ஆகிய, இவ் ஆரவாரங்களையல்லாமல் வேருனதொரு பேராரவாரத்தைக்