________________
கஉகூ பதிற்றுப் பத்து. சூடுநிலை யுற்றுச் சுடர்விடு தோற்றம் கரு விசும்பாடு மரபிற் பருந்தூ றளப்ப நலம்பெறு திருமணி கூட்டு நற்றோ ளொடுங்கீ ரோதி யொண்ணுதல் கருவி லெண்ணியன் முற்றி யீரறிவு புரிந்து சால்புஞ் செம்மையு முளப்படப் பிறவுங் உ0 காவற் கமைந்த வரசுதுறை போகிய வீறுசால் புதல்வற் பெற்றனை யிவணர்க கருங்கட னிறுத்த செருப்புகன் முன்ப வன்னவை மருண்டனெ னல்லே னின்வயின் முழுதுணர்ந் தொழுக்கு நரைமூ தாளனை உரு வண்மையு மாண்பும் வளனு மெச்சமுந் தெய்வமும் யாவதுந் தவமுடை யோர்க்கென வேறுபடு நனந்தலைப் பெயரக் கூறினை பெருமநின் படிமை யானே. இதுவும் அது, பெயர் - (கசு) நலம்பெறுதிருமணி. 6. கேள்விகேட்டல் யாகம் பண்ணுதற்கு உடலான விதிகேட் டல். படிவம் - யாகம் பண்ணு தற்கு உடலாக முன்புசெலுத்தும் விரதங்கள். ஓடியாதென்பதை ஒடியாமலெனத் திரிக்க. (உ) வேட்டனை யென்றதனை வினையெச்சமுற்றாக்கி அவ்வினையெச் சத்தினை (உஉ) அருங்கடனிறுத்தவென்னும் வினையொடு கூட்டுக. உ. உயர்ந்தோர் - தேவர். சு. வேறுபடுதிரு இவளுக்குக்கூறியகுணங்களால் வேறாகிய நின்தேவி யென் றவாறு. திருவினென்னும் இன், அசைநிலை. அவளின் (ச) வாழியரென்னும் வினையெச்சத்தினைச் (கச) சூடுநிலையுற்றென் னும் வினையொடுமுடிக்க எ வரையென்றது, பெருமலையை. அதனை அணைந்த சிறுபொற்றைகளை குறும்பொறையென்றது அ. தெரியுநர்கோடல் - இலக்கணக்குற்றமற ஆராய்ந்துகோடல் பைம்பொறியென்றது, செவ்விகளையுடைய புள்ளிகளை. மேற் (க0) புள்ளி யிரலையென்றதனை அதன் சாதிப்பெயர் கூறியவாறாகக்கொள்க.