பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4


சரி...சரி...நீங்களே பேசுங்க... இதோ, கனெக்ஷென் கொடுக்கிறேன், ஸார்!’ என்று கூறி முடித்தாள்: இணைப்புக்கு ஏற்பாடு செய்தாள். 'ஐயாவுக்கு உடம்பு சுகமில்லாமல் இருக்கிறப்பகூட இந்த ஆள் விடமாட்டார் போல இருக்குதே! ஒசியிலே ஒரு டெலிபோன் கம்பர் கிடைச்சிருக்கு; சில்க் ஷர்ட்டும், கும்பகோணம் வெத்திலேயும் ஆளே மயக்குற பேச் சும் இருக்கிற மட்டும் இவருக்கு ஒரு குறைச்சலும் இல்லே!....அப்படித்தான் சொல்லிக்கிருங்க!....மகேந்திரன்னு பேரை வச்சிக்கிட்டிருக்கார்!.என்னிக்கு புலிகேசின்னு நாமெல்லாம் அழைக்கிறதுக்கு நாள் நட்சத்திரம் பார்த்து வச்சிருக்காரோ?...ஊம்!...இந்த ஆள் யார்?...ஒரு நாளேக்கு அடையாளம் தெரிஞ்சுகிட்டு, நல்ல புத்தி கற்பிச்சுக் கொடுக்கவேனும்!...” 蟻 梁 梁 செந்தில்நாயகம் தொண்டையைக் கனத்துக்கொண்டு, டெலிபோனில் பேச ஆரம்பித்தார். "ம்...பேசறது.ஒ. நீங்களா?...அடடே...நமஸ்காரம்.....வணக்கம்....அப்படியா?. பதினேழிலா?....ராத்திரிதானே?...ஒ.கே!...பாக்கியையெல்லாம் நாம் கேரில் மீட் பண்ணிப் பேசிக்கிடலாம்!....எஸ்.ரொம்ப தாங்ஸ்.எல்லாம் உங்க தயவுதான்!...எஸ்...இட் இஸ். ஸ்பூர்!...ம்!...” முக்குக்கண்ணுடியைச் சரி செய்துகொண்டார். பேச்சு முடிந்தது. முழுக்கைச் சட்டைப் பொத்தான்களைப் பிரித்துவிட்ட படி, சுழல் காற்காலியில் கொஞ்சம் அழுத்தமாகச் சாய்ந்தபடி உட்கா லானர் முதலாளி. மேல் விட்டத்தில் சுற்றியவாறிருந்த மின்சார விசிறி அளவான காற்றை அள்ளித்தெளித்துக் கொண்டிருந்தது. அவருக்கு அடிக்கடி உடம்புக்கு நோய் கொடி வந்துவிடுவதால், அப்படி வந்துவிடுகிற நோய் நொடிக்குக் குளிர்ச் சாதன வசதிக்கு உட்பட்ட அந்தச் சீதளம்