பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


கடிகாரத்தின் துடிப்புச் சத்தம் அவருடைய இருதயத்தின் துடிப்புப் போக்கைக் கூடுதலாக்கி விட்டது போலும் ! நெருங்கி இறுகிய விழிகளின் பிணப்பு விலகிற்று. 'முருகா ' என்று தம்முள் முனகியவராக, குவிந்த கைகளே முகத்திற்கு அணை கொடுத்த வண்ணம் வீற்றிருந்தார் அவர். பிறகு, கைகளே விலக்கிக் கொண்டார். குஷன் மெத்தை யைச் சீர் செய்தார். நன்ருக வசம் பார்த்துக் குங்கினர். கண்கள் இரண்டும் மேல் நோக்கி அலேந்தன. அப்போது, அவர் பார்வையில் தினம் நூறு தடவை பட்டு விலகும் அந்தப் படம் இப்போதும் தென்பட்டது. மங்களம் ' என்று அவரது இதயம் அழைத்தது. அவ்வழைப்பில் இன்பம் மணத்தது: பாசம் கட்டவிழ்ந்தது; ஆசை அழகு காட்டியது. மேஜைமீதிருந்த கடிதம் படபடத்தது. அதன் லேசான படபடப்பு அவரது நுட்பமான மன உணர்வைத் தொட்டிருக் குமோ ?-ஆம்: உணர்வுகள்தாம் மனித மனத்தை ஆளு. கின்றன. அந்த மனம்தான் மனிதனின் விதி'யாகவும் அமை கின்றது ! எதிர்ப்புறம் மேய்ந்தன கேத்திரங்கள். கருணேப் புனித வள்ளலாம் புத்தர்பிரான் இருந்தார். வந்திருந்த அக்கடிதம் கைகளிலே அணந்தது. அனைத்திருந்த முத்துச்சுடர் ஒளி ஏற்றப் பெற்ற பாங் கினிலே, அவருள் ஒருவகை வெளிச்சம் ஊடுருவிப் பாய்ந்தது. அந்த வெளிச்சத்தின் விடிவிளக்குப் போல, அவருள் அந்தப் பெயர் ஒளிர்ந்தது. பிரிந்த கடிதத்தைப் பிரித்தார். ‘யாமினி....!" என்ற பெயர் அழகின் அந்தமாக ஒலித்தது. தம் முள் அழைத்துக்கொண்டார். உச்சரித்த உதடுகள் மணத் தன. ஆம், மணம் ஊட்ட வல்ல பெயர் அது !. செந்தில் நாயகம் பெயரின் உருவத்தை எண்ணமிட்டார். நெஞ்சு இனித்தது. மறுகணம் துடித்தது. அகல விரிந்த அக்கயற்கண்கள் கலங்கிச் சரிந்தன. யாமினி, உன் இருப்