பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


ஆம்: பார்க்கப் போனல், வாழ்வு என்பதே ஒரு ஹம்பக்” தானே ? நீங்கள் ஒரு முறை என்னிடம் மேற்குறித்த விதமாக வாழ்க்கையை விமரிசித்தீர்கள் : இப்போது, அதற்கு ஒர் உதாரணம் ஆகிவிடத்தான் இப் படி நீங்கள் என்னுடைய விதி யாக ஆனிர்களா ? என் கேள்விக்குப் பதில் சொல்லும் காலம்-சொல்லி ஆகவேண்டிய காலம் இனி வெகு தூரத்தில் இல்லே !... முகவரி : இப்படிக்கு, அபலை யாமினி' கடிதத்தை மடித்தார். "முகவரியின் இருப்பிடம் காலியாக விடப்பட்டிருந்த முடிவே செந்தில் நாயகத்துக்குப் பேரதிர்ச்சியாகத் தோன்றி யது. அதுவே தன் விதியாகவும் பட்டது. யாமினி ே என்ன பழைய செந்திலாகவே தான் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிருய் !...ஆனல் உனக்கு நான் செய்த பாவத் துக்கு நித்த நித்தம் நான் அனுபவிக்கும் நரக வேதனேயை நீ எங்கே அறியப் போகிருப் ?...உன் மனக் கொதிப்பும் வயிற்றெரிச்சலுக்தான் என்னே இப்படி ஆட்டிப் படைத்து வருகின்றனவே 2.யாமினி ! நீ உன்னுடைய இருக்கையின் விலாசத்தை ஏன் எழுதாமல் விட்டாய் ? நான் செத்துச் செத்துப் பிழைக்கும் தண்டனே போதாதா ?.ஐயோ!. கடவுளே...செந்தில் குமாரா !...” அப்போது, அவர் திரும்பவும் புது சிகரெட் டப்பாவைப் பிரித்துப் பற்ற வைத்தார். அவரது நெஞ்சிலும் கினேவிலுமாக அது தருணத்தில் மங்களமும் யாமினியும் சுற்றிச் சுழன்று ஆல வட்டம் இட்டுக்கொண்டிருந்தார்கள் ! கேத்திர மட்டத்தைத் துறந்து புறப்பட்டது கண்ணிர்ச் சரம்.