பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி : ஐந்து பிறவிப் பூக்கள்! | ‘ஸ்டுடியோ ஹெவன் உரிமை பூண்டிருந்த மண் அப்போது செந்தில் நாயகத்தை விழுங்கி ஏப்பம்விடத் துடித்தது போல பயங்கரச் சூழலே உருவாக்கிக் காட்டிவிட்டது : அவர் கண்ணுடியைத் துடைத்துக்கொண்டு ஏறிட்டு நிமிர்ந்து நோக்கினர். மகேந்திரன் தன்னுடைய சாகசம் நிறைந்த விழிகளேத் தாழ்த்திக்கொண்டான். "சரி, நீர் உள்ளே போய்க் கச்சிதமாக விவரம் விசாரித்துக் கொண்டு வாரும்: பிறகு, ஆகவேண்டியதைக் கவனிக்கலாம். நான் அப்புறம் வருவேன்!" ஆணேயின் வடிவம் எடுத்தது அவரது பேச்சு. மகேந்திரன் உள்ளே மடங்கி நடந்தான். அவன் போனல் என்னவாம்? இப்போது ரீமான் செந்தில் அவர்களுக்குத் துணையா இல்லாமல் போய்விட்டது?-சிகரெட் பெட்டி பிரிந்தது. புகை அலைகள் அவரது நெஞ்சலகளோடு போட்டி கட்ட இயலவில்லை. நாலு பக்கமும் திரும்பினர். . "எங்கெங்கு காணினும் சக்தியடா! என்று பாடினன் புது மைக் கவிஞன் இங்கோ எங்கெங்கு கோக்கினும் ஒளிமயம்!-இப்படி நினைவு பின்னியவராக, காரை ஒதுக்கிவிட்டு, சில தப்படிகள் கடந்தார்.