பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி ஆறு "நான் உன் வினை !' - F கபாலீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுத் திரும்பி, பாலும் பழமும் சாப்பிட்டு, கட்டிலில் உறக்கம் கொள்ள அமர்ந்து சாய்ந்தபோது, செக்தில்நாயகத்துக்கு ஒரு முறை வாய்விட்டுக் கதறி அழுது புலம்ப வேண்டும் போலிருந் தது. ஆகவே, அந்தப் பெரிய அறையை காதாங்கியிட்டு அடைத்துக்கொண்டார். .ெ க ஞ ைச அடைத்துவிட்டிருந்த துன்பத்தின் சுமை முழுவதையும் கண்களுக்குக் கொணர்ந்து விட்டிருக்க வேண்டும். கண்ணிர் ஆருகப் பெருகியது. துன்பம் கரைந்ததா ? இல்லை, மனம்தான் கரைந்ததா ?-எது கரைந்ததோ என்னவோ, அவரது மனப்பாரம் மட்டும் கரைந்து குறைந்ததாகத் தெரியவில்லே. தெய்வமே, நான் என்ன செய்வேன் ? என்று ஒங்கி ஒல மிட்டார். அப்பொழுது பயம் செறிந்த சிரிப்பொலி அறையின் காலு பக்கச் சுவர்களேயும் அடைத்து எதிரொலித்தது. யார் சிரித்தது ? 'நீ செய்த பாவம் நான் !...” 'உன் விதி நான் ! ‘நான் உன் வினே !’ குரல்கள் எக்காளமிட்டு முழங்கின. ப. வே.-3