பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

சிகரெட்டின் இறுதி முனையில் இருந்த நெருப்பின் ஜ்வாலை அவரைப் பயமுறுத்தியது. அதை வீசினார்; பீரோவை நாடினார். அவசரமாக, அன்று வந்த யாமினியின் தபால் கவரை எடுத்துப் புரட்டினார். தபால் தலைமீது குத்தப்பட்டிருந்த தபாலாபீஸ் முத்திரையை உன்னிப்புச் சேர்த்துப் பார்த்தார். ‘கீழ்ப்பாக்கம்’ என்ற பெயர் இழுபறியாகத் தெரிந்தது. இதை வைத்துக் கொண்டு யாமினியை எப்படித் தேடுவதாம் ?....‘முருகா !...’

திடீரென்று அவருக்குக் குமட்டல் கிளம்பியது.

அவர் கண் வளரத் தொடங்க, அப்புறம் நாற்பது நிமிஷங்கள் வரை தேவைப்பட்டன.