பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 : டாளும் : அந்தப் பையன் பேர் என்னவோ சொல்லிச்சு மற்க துப் பிட்டேனுங்க. முதலாளி ...இப்படி இன்னும் ரெண்டு. பேர் வழிங்க இருந்ததாக்க, கெடு தப்பி அபூர்வமாய்ப் பெய் கிற மழைகூட பேயாமலிருந்துப் பிடுமுங்க ...' புதிராய்க் குழம்பிய இரு குழப்பங்களுக்கு மத்தியில் ஒர் உள்ளம் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தது. ★ ★ 女 ஆசையை இலட்சியமாகக் கொண்டால், அவலங்கள் தாம் எஞ்சும். அன்பை இலக்காக்கிக் கொண்டாலோ, இன்பங் கள் மிஞ்சும் :--இது உலக இயல்பு. வாழ்வியல் தத்துவமும் இதுவேயாகும். இவ்வுண்மையை அனுபவார்த்தமாக உய்த் துணரத்தான் மனிதனுக்குப் பிறவி கிட்டுகிறது. அவனவன் வினைக் கேற்ப, விதி அவனே இயக்குகிறது. ஆடுகிருன்; விளே யாடுகிருன் எல்லாம் அடங்கி ஒடுங்கிய பின், அவன் தன்னே வைத்து, தன் கதையை வைத்து வாழ்வின் தத்துவத்தை எடைபோடுகிருன். அதுவரை மூடிக்கிடந்த கெஞ்சமும் கண் களும் அப்போதுதான் திறந்து கொள்ளுகின்றன. செய்த பாவங்கள் அவனே ப் பேய்களாக அலேக்கழிக்கையில், அவனால் அவற்றைச் சாட முடியாத நிலையில், அவன் அவற் றைத் தாங்கிக் கொள்ளும் ஜீவனற்ற கதியில்-தன்னை உணர்ந்து, பாவமன்னிப்புக்காகத் தவம் கிடந்து. கடைசியில் தன்னைப் படைத்த கடவுளேத் தஞ்சமடைகிருன். ஆசைகள் இருந்த இடம் காணவில்லே. அன்பு தன் இருப்பிடத்தை அம் மனித மனத்துள் முழுமையாகப் பற்றிக் கொண்டுவிடு கின்றது : இப்போது, விதியின் குரலேக் கட்டுப்படுத்திவிட்டு, தெய்வத்தின் சிரிப்பு ஒங்குகிறது !. இது மனிதனின் கதை; மனித மனத்தின் கதையும் இதுவே யன்ருே : இப்போது புதிய மனிதராகப் பிறவி கொண்ட மாதிரி பூரீமான் செந்தில் நாயகம் விளங்கினர். திருற்ேறுப் பட்டைகள் நெற்றித் திட்டில் பளிச்சிட்டன. நூதனமான களே கட்டி