பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை


விதி+வினை+தெய்வம்=யாமினி!


வாழ்க்கையின் அபூர்வமானதொரு கவிதை, பெண்!

அதனால்தான், மங்கையராகப் பிறப்பதற்கு மாதவம் செய்திடவேண்டும் என்று பாடியிருக்கிறார்கள்.

வாழ்க்கையின் அதிசயமானதொரு பிரச்சினையும் அதே பெண்தான்!

ஆகையினால்தான், பெண் என்று பூமியில் பிறந்துவிட்டால் மிகப் பீழை இருப்பதாகவும் பாடி வைத்தார்களோ ?....

ஆம்; ரசனைக்கும் சிக்கலுக்கும் ஒரே சமயத்தில் பாத்திரமாகிவிடுகின்றாள் பெண் எனும் பாத்திரம்.

பெண், வாழ்க்கையின் புதிர் ஆகும் பொழுது, அதே பெண், வாழ்க்கைக்கு ஒரு தத்துவம் ஆகிவிடுவதில் வியப்பில்லை அன்றோ?

இப்படிப்பட்ட சுற்றுச் சார்பில் வாழ்க்கை இயங்கும் போது—அல்லது, இயக்கப்படும் பொழுது, பெண்ணின் பின்னணியாக விதி—வினை—தெய்வம் ஆகிய சக்திகள் விளையாடத் தொடங்குகின்றன; விளையாட்டுக் காட்டவும் தொடங்குகின்றன!— எனவேதான், பெண்மை எனும் சக்தி ஒரு சோதனைக் களமாக மாறத்