பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி : எட்டு "லவ் !' | | யாமினியின் இருப்பிட விவரத்தை அறிவதற்கான வழி வகைகளைப்பற்றி மானேஜரிடம் கலந்தாலோசிப்பதில் தாழ்வு மனப்பான்மை கொள்ளத் தேவையில்லே என்றே நினைத் திருந்தார் செந்தில் நாயகம், அதற்கான பேச்சை எப்படி நூலெடுத்துத் தொடங்குவது என்பதுதான் ஒரு பிரச்சினை யாகத் தோன்றியது. இருந்தாலும் நிலையை இனியும் கடத்தி விட ஒப்பாததால், உடனடியாகவே பேச்சைத் தொடர விழைந்து, 'சும்மா உட்காருங்க பிள்ளே,' என்று அனுமதி வழங்கவே, முத்துலிங்கம் அமரிக்கையாக நாற்காலியில் உட் கார்ந்தார். அதற்குள் பாங்க் ஒன்றிலிருந்து செந்தில் நாயகத்திற்கு போன்கால் வந்தது. உரிய பதிலைச் சொல்லிவிட்டுத் திரும் பினர். பிளாஸ்கை எடுத்தார். முத்துலிங்கம்தான் மூக்குக் கண்ணுடியை இழுத்துவிட்டபடி தம்ளரில் காப்பியை ஊற் நிக் கொடுத்தார். செந்தில்நாயகம் ஆவி பறக்கக் குடித்தார். பிள்ளேவாளுக்கு அவ்வளவு தாங்கவில்லை. 'பிள்ளைவாள்! உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பேசணும். அதற்கு இப்போ சந்தர்ப்பமும் ஏற்பட்டிருக்கு. அதற்கு உண்டான அவசரமும் வந்திருச்சு!...” அவர் தயங்கினர். "சொல்லுங்க!...” பிள்ளேயும் தயக்கத்துடன் துரண் டிர்ை.