பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


'இருபது வருஷத்துக்கு முந்தின ஒரு கதை. ரொம்பவும் அந்தரங்கமான ஒரு விஷயம். இப்போ உங்ககிட்ட துணிஞ்சு சொல்லுறேன்....வந்து...நான் திருச்சியிலே வாசிக் கிறப்ப, யாமினின்னு ஒரு பொண்ணே லவ் பண்ணினேன்... அவளும் என்னே நேசிச்சா. காதலையும் கனவுகளேயும் வளர்த்துக்கிட்டு உயிருக்குயிராய்ப் பழகினுேம். ஒரு சோதனையாட்டம் விதி விளையாட, அவள் திடீர்னு என்ன கிராகரிச்சிட்டா. வெண்ணெய் திரண்டு வாரப்போ தாழி உடைஞ்ச நடப்புத்தான்!. 'ம்.அப்புறம் கான் மங்களத்தைக் கல்யாணம் செஞ்சு கிட்டேன். யாமினிக்கு திருமணம் செட்டில் ஆச்சு. எனக்கும் பத்திரிக்கை அனுப்பிக்க மறக்கல்லே யாமினி!...அப்புறம். அப்புறம்தான். . நான் ஒரு பாவத்தைச் செஞ்சிட்டேன்...! அவள் விதியாகி என்னேப் பழிவாங்கினுள்; பதிலுக்கு நான் விதியாகி அவளைப் பழிவாங்கினேன்!...நான் கெடுமதிக் காரன்!.கான் செஞ்ச அந்தப் பாவத்தை மட்டும் கேட்டுப் பிடாதீங்க, பிள்ளே வாள், கேட்டுப்பிடாதீங்க! நான் செஞ்ச துரோகமே என்னுேட வினையாகி, நான் அனுபவித்தாகவேண் டிய விதியாகவும் அதுவே என் தலையெழுத்தாகவும் மாறி, என்னே ஆட்டிப் படைச்சு வருது இத்தனே காலமாய்!...இனி மேலும் என்னல் இந்த நாகவேதனையைத் தாங்கவே முடியாது! 'ஆனபடியினலே, நீங்க எப்படியும் யாமினியைக் கண்டு பிடிச்சுத்தான் ஆகணும்!...அவள் இங்கேதான் இருக்கணும். எனக்குச் சமீபத்திலேவந்த ஒரு லெட்டரைக் கீழ்ப்பாக்கத்திலே தான் அவள் போஸ்ட் செய்திருக்கா... அவளே அடையாளம் கண்டுகொள்ளுகிறதற்காக அவளோட போட்டோவையும் எடுத்தாந்திருக்கேன் ! அவளேச் சந்தித்து, அவகிட்டே மன் னிப்பு வாங்கிட்டேன, நானும் நாலுபேரைப்போல நிம்மதி யாய் இருக்க முடியும்! நீங்களும் தெய்வமும்தான் எனக்கு அனுசரனையாய் இருக்கவேணும்!” இருமல் வந்தது. பேச்சும் கின்றது, அத்துடன்.