பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


தோட சிநேகிதர்னு சொன்னரே, ரொம்பவும் கம்பீரமான குரலில்!” என்று நெஞ்சுக்கு நெஞ்சே சாட்சியமாக தம்முள் பேசிக்கொண்டார். உள்ளத்தை விழிகளில் வாங்கிக் கொண்டு மலேப்புத்தட்டி நின்றவர், திர்க்க முடியாத குழப் பத்தைத் தொட்டு நிற்பதாகவே உணர்ந்தார். மண்டை கொதித்தது. ரத்த நாளங்கள் துடித்தன. மங்களம்.!...மை டியர்...' கைகள் இரண்டையும் கூப்பிக்கொண்டு, அங்கு கிடந்த கூடை நாற்காலி ஒன்றைச் சரணடைந்தார். எதுவும் நடக்க வில்லை என்றும், எதுவுமே நடக்க முடியாது என்றும் கல்ல தைச் சிந்திக்கும் பான்மையுடன் முடிவு கட்டினர். மறுமுறை செந்தில்நாயகம் பார்வையை விரித்தபோது, "வணக்கம்,” என்ற கம்பீரத்தொனி கேட்டது. செந்தில்நாயகம் நிமிர்ந்து, குரலுக்கு உரியவரை நோக்கினர். யாரோ புது நபர்!. யார் அவர்? வந்த மனிதர் கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு, யாருடைய சொல்லுக்கும் அனுமதிக்கும் காத்திருக்க விரும் பாதவர் போன்று, அங்கு கிடந்த நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டுக்கொண்டு குந்தினர். அவர் முகம் பளிச்சென் றிருந்தது. தெளிந்த சிந்தையின் படமோ அது: அன்பும் கனிவும் இருந்தன. செந்தில்நாயகத்தின் வயசுதான் இருக்கவேண்டும். பார்த்தால், நாற்பத்தாறு’ என்று சொல்லிவிட முடியாது, குறைவாகத்தான் மதிப்பிட முடியும். சந்தனப்பொட்டு துலாம்பரமாகப் பொலிந்தது. அதுவே அவருக்குத் தனிப் பட்ட களையை ஊட்டியிருக்கவும் கூடும். வாங்க, மாடிக்குப் போகலாம்!” என்ருர் அவர். வந்தவர், "எதற்கு? வேண்டாம்!” என்று சொல்லி விட்டு, செந்தில்நாயகத்தை ஊடுருவிப் பார்வையிட்டார்.