பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


செந்தில்நாயகத்தின் வதனத்தில் மிச்சம் மீதம் இருந்த ரத்தப்பசை வறள ஆரம்பித்தது. 'என்னே உங்களுக்குத் தெரியாவிட்டாலும் என் பெயர் உங்களுக்கு கினேப்பிருக்க வேண்டுமென்றே நினைக்கிறேன்.” என்று நூதனமான அழுத்தம் பாய்ச்சிப் பேசினர் மோகன சுந்தரம். 'ஒஹோ!...அப்படியா?" 'மங்களம் உள்ளே இருக்குதா?" என்று கேட்டுத் கொண்டே, உட்புறம் திருஷ்டியைச் செலுத்துவதைக் கண்ட செந்தில்நாயகம்,அம்மனிதர் கூறிய, "கேசத்தோட பழகினுேம்: என்ற அறிமுகம் இப்போது ஏதோ ஒரு விபரீதமான பொருளைக் கற்பிக்க முனேவதாக அவர் மனம் பொருமியது. தெளிவிழந்த மனத்தில் தெளிவு பிறக்கவே வாய்ப்பு இல்லையோ? "என் சம்சாரம் பங்களுர் போயிருக்குது. ஏதானும் தகவல் இருந்தால், எங்கிட்ட சொல்லிட்டுப் போங்க, வந்த தும் சொல்லிடுறேன்!” என்ருர் செந்தில்நாயகம். 'மன்னிக்க வேணும், மிஸ்டர் செந்தில்நாயகம்!. மங்களத்திடம் தனிமையிலே சில நிமிஷம் பேசவேணும். நான் இங்கேதான் இருப்பேன். மறுபடியும் காளேக்கு வந்து பார்க்கிறேன்!...” என்று சொல்லிவிட்டு, மோகனசுந்தரம் ஒயிலுடன் கையை உயர்த்தி, போய் வருகிறேன்’ என்று அடையாளம் காட்டிவிட்டுப் பிரிந்தார். இளநீல வர்ணத் துண்டு எவ்வளவு அழகாக இருந்தது : 'நடையன்கள் துளிச்சத்தம் செய்ய வேண்டுமே! அவ்வளவுதான்! செந்தில்நாயகத்தின் நிம்மதியை அபகரித்துப் பையில் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார் மோகனசுந்தரம். தரை முதலேயாகத் தவியாய்த் தவித்துத் தண்ணிராப் உருகினர் திருவாளர் செந்தில் நாயகம். குற்றவாளி அருண்டு போலீசுக்கு அஞ்சி நடுங்குவதைப் போல அவர் நடுங்கினர்