பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


கிறுக்குப் பற்றினுற்போன்று மாடிக்கு விரைந்தார். மண்டை "விண்ணென்று தெறித்தது. ஒடிப்போய்ப் பெட்டகத்தைத் திறந்தார் அவர். டைரி ஒன்று விதியாக-அவரது விதியாக விஷமப் புன் னகையுடன் வெளியே வந்தது. புரட்டினர். அந்த ஒரு நாள் : அது, யாமினியின் திருமண வைபவ நாள்: அன்றைய தேதியின் அடியில் இருந்த ஒரு விவரத்தைப் படித்தார். ஐயோ! நான் மகா பாவி!...நான் ஏவிய பழி அம்பு இதோ திரும்பிவந்து என்னேயே பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது!... இனி கான் நாகவே தனப்பட்டுத் துடிக்க வேண்டியதுதான். இனியும் என்னே என் மனம் சும்மா விடமாட்டாது'... ஆமாம்!...” சிகரெட் பெட்டி காலியானது. சாம்பல் தட்டு கிரம்பி வழிந்தது. 责 女 女 மூன்று தினங்களாகச் செந்தில்நாயகத்திற்கு விடாத காய்ச்சல். மனஉளைச்சலின் விளைவு அது. காசிக்கு வேலே கெட்டி வாங்கியது. இரண்டொரு நாளில் வருவதாக எழுதியிருந்த பிரகாரம், மங்களம் வரக்காணுேம். அந்த மதுரை மனிதர் மோகனசுந்தரம் காலையில் வந்துவிட்டார். மாடியில் ஒரளவு தெம்புடன் படுத்துக் கிடந்த செந்தில்நாயகம், தாம் அயலூர் சென்றுவிட்டதாகப் புனைந்துரை சொல்லும்படி வழிசொல்லி வந்தவரை வழி பனுப்பச் செய்துவிட்டார். மாலை மயங்கி வந்தது. கம்பெனியில் ஆடிட் செய்துகொண்டிருந்தார்கள்.