பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


அவ&ளப் பார்த்தவுடன், பாவச் சுமையின் கண்டம் தப்பிய பழைய சம்பவத்தை கினேவு கூர்ந்தார். 'என்னேச் சூழ்ந்த புண்ணியம் இது ஒன்றுதானே ?' என்றும் நிறைவுடன் ஆனந்தம் கொண்டார். கடைசிவரை, குமாரி குயில் மொழிக்கு, அன்ருெரு தினம் தான் கொண்டிருந்த கெட்ட நோக்கம் தெரியாமல் இருந்துவிட வேண்டுமே என்றும், அந்த மகேந்திரனும் மனம் மாறி இந்தப் பெண்ணிடம் எதையும் கன்னபின்னவென்று உளறிக் கொட்டாதிருக்க வேண்டுமேயென்றும் அவர் உள்ளுர வெகுவாகக் கவலேப் பட்டதென்னவோ உண்மைதான் ! காலேயில் பலகாரம் வைத்த காசி, தனக்குத் தடுமன் முற்றிவிட்டதாகச் சொன்னன். ஆகவே, வந்த குயில் மொழி வந்த அலுவலே முடித்துக்கொண்டு கம்பெனிக்குப் புறப்பட்டபோது, ஆபீஸ் பையன் மணியைத் துணைக்கு அனுப்புமாறு பணித்தார். மணிப்பயல் வந்துவிட்டான். அவன் வருவதற்கென்றுதான் கடிகாரமும் மணி அடிக்காமல் இருந்தது. மணி இப்போது பதினென்று : பொடியனிடம் ‘டிகிரிக் காப்பிக்கு உத்தரவுகொடுத் தார், மங்களம் அண்ட் கோவின் உடைமைக்காரர். ரேடியோவை ட்யூன் செய்தார். காப்பி வந்தது. காப்பியைச் சுவைத்துக்கொண்டே மேலெழுந்தவாரியாகப் பார்வையைச் சுழலவிட்ட போது, சிறுவன் மணிக்குச் சொந்தமான கண்கள் தம்மையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டார். அவ்வாறு பார்த்த போது, மணியின் பேசும் விழிகளே பக்கவாட்டில் பார்த்த போது, அவ்விழிகள் பேகியதுடன் நில்லாமல், அவை இரண்டும் யாமினியின் உயிர்த்துடிப்பு மிக்க கயனங்கள் இரண்டையும் கினைவூட்டவும் செய்தன.