பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&2 அதே கிலேயுடன் அவளும் தலையை உயர்த்தி அவரை நோக்கினுள். அவர்கள் இருவரும் காதலின் கனவுப் பாதையில் பீடு கடைபோட்டுக் கையொடு கை பிணத்து, இதயத்துடன் இதயம் பின்னித் திரிந்த நேரத்திலே, இதே பாடலின் வரி களே ஒரு முறை கேட்டு விட்டு, அவர்கள் இருவரும் தங் களே மறந்து எவ்வளவு மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடித் திரிக் தார்கள் ! "என் பத்தினிப் பெண் நீ என் அருகில் இருக் கையிலே, எனக்கு என்ன குறைச்சல் ?...பண்ணும் பாட் டும் நம் கூட்டுக் களியிலே தாளமிட்டுக் களிநடம் புரி யாதா ?” என்று செந்தில் சொல்ல, அவள் குறுவிழி மயக்கி, கோல நகை தளர்த்தி, எழிலார் நெஞ்சுயர்த்தி "ஆம்" போட்ட அந்தப் பாவையை காலம் எப்படி மறக்கக் கூடுமோ ? ஆனால் இன்று...? அவர் கடந்ததை நினைத்துக் கண்ணிர் மல்கினர்; வாய் முடி மெளனியார்ை. அவளோ வேதனையின் வடிவில் களையிழந் தாள்; கண் சோர்ந்தாள்: வைராக்கியத்தின் உருக் கொண்டாள். அதே கணத்தில், எழுந்து ரேடியோவை கிறுத்தினுள் யாமினி. வந்து அமர்ந்தாள். அவளது இச் செய்கை புயலாய் அவளைச் சித்திரித் திருக்க வேண்டும். செந்தில் நாயகத்துக்கு அச்சம் தலைகாட்டியது. அவர் விடுத்த கணக் கடிதங்களே அவரால் எண்ணுமல் இருக்க முடியவில்லேயே!... செந்தில் நாயகம் வாய் திறந்தார்: திருவாய் மலந்தார்: ". இந்த இருபது வருஷமாய் கான் தேடிக்கிட்டிருந்த துக்குப் பலன் நேத்துத்தான் கிடைச்சது. அதுக்கும்கூட, வேளை அப்பத்தான் வந்திருக்க வேணும்போல!. என்னுடைய மிருகமனம் தெளிஞ்சு வந்தப்பவே, நீங்க எங்கே இருக்கிங்க என்கிற விவரம் எனக்குத் தெரிஞ்சிருந்தால்-உங்க