பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


பழியைச் சுமத்த உங்களுக்கு எப்படித்தான் மனம் வங்ததோ?...இத்தகைய பொய்யைச் சொல்ல உங்கள் மனச் சாட்சி கொஞ்சமும் வெட்கப்படவில்லையா?..,ஐயோ!... "என் தூய்மையை என் மனச்சாட்சி அறியும்!-என்னேப் படைத்த தெய்வம் அறியும்:-அவை போதும் எனக்கு: "ஆனால், என் வாழ்வு...? "உங்கள் பொய்க் கடிதத்தைக் கிழித்து வீசிவிட்டு, என்னே நம்பி, என் பேச்சை நம்பி, என்னே ஏற்க என் கனவரல்லவா பெருங்தன்மை கொண்ட மனிதபிமானத்துடன் தயாராக இருக்க வேண்டும்?... அப்படிப்பட்ட "உண்மை அதிசயங்கள்’ எங்கே இக் கலியுகத்தில் நிகழ்கின்றன!... எப் படியோ உங்கள் மிருக வெறிப்படி நான் உங்களது ஆத்திரத் துக்குப் பலியாகிவிட்டேன். என்னைப் பழிவாங்கிவிட்டீர்கள்: இப்போதாகிலும் உங்களது மிருகவெறி அடங்கி விட்டதா?... "...இப்போதாவது சொல்லுங்கள்...நீங்கள் என்னுடன் எப்போதாவது அந்தரங்கமான உடல் தொடர்பு கொண்ட துண்டா?...ம்...வெட்கத்தைவிட்டுக் கேட்கிறேன்... சொல்லுங் கள், மிஸ்டர் செந்தில் நாயகம்!...ம்!...மூடிக்கிடக்கும் உங்கள் நெஞ்சைத் திறந்து உண்மையைச் சொல்லுங்கள்!...ம்!” இவ்வாறு ஒரே மூச்சில் பேசிக்கொண்டே வந்த யாமினி, விதியின் வடிவெடுத்தாள். ஊழ்வினேயின் வடிவெடுத்தாள். அவள் கண்கள் காட்டேறி போலச் சிவந்தன. காப்பித் தம்ளரை எற்றிவிட்டாள். அவரது தாழ்ந்து குனிந்த தலையை கிமிர்த்தி அவரது சட்டையைப் பற்றிக் கொண்டு 'ம். சொல்லுங்கள்!” என்று வீறு கொண்டு முழக்கமிட்டாள். செந்தில் நாயகம் அப்படியே யாமினியின் பாதாரவிந்தங் களிலே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து விம்மினர், "யாமினி: நீ தூய்மையின் வடிவம்:...உன்னுேட பரிசுத்தத்தைப் பத்திப் பேச எனக்குத் துளிகூட அருகதை கிடையாது...உனக்குச் செஞ்ச துரோகமே என் வினையாகி, அதனுலே என் மனச் சாட்சி என்ன அணு அனுவாக கிதமும் கொன்று. நான் கிம்மதி இழந்து தவித்தேன் விதியும் வினையும் என்னச்