பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
104

௱௯௰௫ கிரெயின்ஸ்கள்  சொக்கவெள்ளி

௰௫ கிரெயின்ஸ்கள்  செம்பு முதலான கலப்படம்


மற்ற நாணயங்கள் அததற்குத் தகுந்த நிறையும் அத்தினுடைய மாற்றையுங் கொண்டிருக்க வேண்டியது.

J. C. Mooris

(3) கமிசேரியாட்டு விளம்பரம் மதிறாசு ௲௮௱௫௨ ௵ அக்டோபர் ௴ ௨௰௮ ௳.

இதுனாலே பிரசித்தப் படுத்துகிற தென்னமென்றால் செனவரி மாதம் முதல் தேதி முதல் வருகிற வருஷத்துக்கு தேவையான முதல் தறம் நாட்டரிசியும்-இறண்டாந்தரம் தெற்கித்தரிசியும்-வெள்ளைச் சர்க்கரையும்-உப்பும்-சற்பறா பண்ணுவதற்காக குத்தகை ௲௮௱௫௰௨ ௵ நவம்பர் மாதம் ௰௫௨ திங்கள் கிழமை பகல் பன்னிரண்டு மணிக்கு யிந்த ஆபீசில் பிறசித்தமான யேலம் போட்டு யேலத்தில் இத்தகைய குறைந்த விலையாக கேழ்க்குறவருக்கு கமிசேரி செனறல் துரையவர்கள் ஒத்துக்கொண்டதின் பேரில் குத்தகை கொடுக்கப்படும்.

பிரதிதினம் தேவையானது யிவ்வள வென்று குத்தகைகாரருக்கு தெரிவெத்ததின் பேரில்-பிரசை டென்சியிலும் - பறங்கிமலையிலும் - பல்லாவரத்திலும்-பூந்தமல்லியிலுமிருக்கிற யீறோபியான் றா ணுக்களுக்கும்-ஆசுபத்திறியன் முதலிய யிடங்களுக்கும் குத்தகைகாரன் மேல் கண்ட தினுசுகள் சற்பறா பண்ணவேண்டியது.

மாதாந்தரம்-தேவையான சறாசறி மொத்தம் யிதினடியில் வவறித்திக்குறபடி.