பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
114

A முபாதலா-money in advance
P ஜவாப்நவீஸ்—a secretary, a clerk
A ஷாமீல்-included
A முசகதி—accountant
P ரோஜ்கார்-service
P ஜிந்தகி-property


A-Arabic
G-Common usage (கிராமியம்)
H-Hindustani
M-Mahratta
P-Persian S-Sanskrit
ழல்-முதலியார்
நா-நாயகர்
பி-பிள்ளை
௸-மேற்படி
௵-ஆண்டு
௴-திங்கள்
௳-நாள் (தேதி)

சமுதாய நூல்கள்

இவைமட்டுமன்றி மக்கள் சமுதாய வாழ்வு பற்றிய பல நூல்கள் உரைநடையில் வந்துள்ளன. 1898இல் ‘இந்தியன் கிரிமினல் லாச் சுருக்கம்’ என்ற நூல் தமிழில் வெளியாயிற்று. இந்நூல் கும்பகோணம் என். வைத்தியநாத ஐயரால், போலீசு ஆபீசர்கள், கிராம முனிசிபுகள், பிரை வேட் வக்கீல்கள் முதலிய கிரிமினல் வியவகார ஞானமடைய விரும்புவோர் யாவருக்கும் முக்கிய உபயோகப்படும்படி இயற்றப்பட்டது’ இவ்வாறு 1897இல் எஸ். குமாரசாமி முதலியார் எனபவரால் 'ஜமீந்தாரி என்று வழங்குகின்ற ஸ்திதியைச் சார்ந்த சங்கிரக கிரந்தம்’ என்ற நூல் ஜமீந்தார் முறை பற்றி எழுதப் பெற்றுப் பதிவு செய்யப் பெற்றது. இவை மட்டுமின்றி, 'விதவா விவாகம்’ போன்ற சீர்திருத்தங்கள் பற்றிய நூல்களும் எழுந்தன. அந்நூல்களுக்கு அடிப்படை அக்காலத்து அத்தகைய திருமணங்கள் நடைபெற்றமையே என்பது அந்நூல்களைப் பயில்வார் நன்கு உணர்வார்கள். நாகர்கோயிலைச் சேர்ந்த சேஷையங்கார் தம் மகனுக்கு இத்தகைய மணம் செய்தார் என்றும் அதை ஆதரித்து 1874இல் 'விதவோத்வாக விவேகம்’ என்ற நூல் எழுதப்பட்டதென்றும் அறிகிறோம். அந்நூலை மறுத்து அடுத்த ஆண்டே (1875இல்) ரங்காச்ரங்காச்