பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
117

இவை அனைத்தும் மக்கள் எளிதில் உணர்ந்து கொள்ளும் பொருட்டு உரைநடை நூல்களாகவே அமைந்துள்ளன. பழமொழி, வேடிக்கை, விடுகதைகள் முதலியவற்றைச் சார்ந்த உரைநடை நூல்களும் நாட்டில் சென்ற நூற்றாண்டில் உலவின.

காங்கிரஸ் சென்ற நூற்றாண்டிலேயே நாட்டில் தோன்றினமையின் அது பற்றிக் ‘காங்கிரஸ் வினா-விடை’யும் (1890), ஆசியாவின் ஐக்கியமும் (1888) வெளிவந்தன.

பாட நூல்கள்

இவையன்றி, கல்லூரியிலும் பள்ளியிலும் கற்கும் மாணவர்களுக்கென எண்ணற்ற நூல்கள் சென்ற நூற்றாண்டில் சிறப்பாகப்-பிற்பகுதியில்-வெளிவந்துள்னன. அவை பல நூற்றுக் கணக்கில் இருப்பதால் அவைபற்றி விளக்கம் தேவையில்லை. அவற்றை வெளியிட அரசாங்கத்தார் பல சட்டதிட்டங்களும், வறையறைகளும் செய்திருந்தார்கள் என நம்மால் அவற்றின் முன்னுரைகளிலிருந்து அறியமுடிகின்றது. ‘பால பாடம்’ முதலிய நூல்களை ஆறுமுக நாவலர் முதலிய நல்லறிஞர்கள் எழுதி-அரசாங்கப் பாடத் திட்டத்தில் இல்லையாயினும்-இளம்பிள்ளைகள் உள்ளத்தில் ஒழுக்கம், பண்பாடு, சமய உணர்வு முதலிய நல்லியல்புகள் அரும்புமாறு ஆக்கப்பணி செய்துள்ளனர். அவைபற்றியெல்லாம் விரிப்பிற் பெருகும். (ஒரு சில நாளை காணலாம்)

பொது மக்கள் படித்தறியத் தக்கதாக அறிவியல், தாவரம், நிலம், மருந்து, வரலாறு பற்றிய நூல்களும் பல சென்ற நூற்றாண்டில் வெளியாயின. அவற்றுள் பெரும்பாலான ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்புகளாகவே அமைகின்றன. அவற்றுள் சில கலப்பு மொழியில் அமைந்துள்ளன எனினும் ஒரு சில நல்ல தமிழில் எழுதப் பெற்றுள்ளதையும் காணமுடிகின்றது. சில பள்ளிகூட நூல்களில் பல விளக்கங்கள் முதலில் ஆங்கிலத்திலும், பிறகு தமிழிலும் எழுதப்பெற்றுள்ளன. சில நூல்களில் பொருளடக்கம் முதலியனவும் ஆங்கிலத்திலேயே அமைந்.