பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
142
தேகத்தை நித்திய தேகமாக்கி, எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப்பெற்று வாழ்தல் எதனாற் பெறுதல் கூடிமென்று அறியத் தொடங்கிய தருணத்து, வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது, எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன். பின்னர், திருவருள் சுதந்திரம் நமக்கு எந்த வழியாற் கிடைக்குமென்று அறியத் தொடங்கிய தருணத்து, 'எனது’, ‘யான்’ என்னும் தேக சுதந்திரம், போக சுதந்திரம், ஜீவ சுதந்திரம் என்ற மூவகைச் சுதந்திரங்களும் நீக்கியவிடத்தே கிடைக்குமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி யறிந்தேன். ஆகலில், எனது சுதந்திரமாகக் கொண்டிருந்த தேக சுதந்திரத்தையும், போக சுதந்திரத்தையும், ஜீவ சுதந்திரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வசுதந்திரமாகக் கொடுத்துவிட்டேன்.

அடிகளார் பலருக்குக் கடிதங்கள் எழுதினமை அறிந்தோம். அப்படியே அடிகளாருக்குப் பலரும் கடிதம் எழுதியுள்ளனர். அவர்தம் நடைகளுள்ளும் ஓரிரண்டு காணல் ஏற்புடைத்து ஆதலால் அடிகளார் தொடர்புடைய இரு கடிதங்களின் படிகளைக் கீழே தருகிறேன்.

திருமுகம்

சுவாமிகளுக்கு வந்தனம்

பக்—91

தங்கட்குத் தற்காலம் நேரிட்டிருக்கிற ஆபத்தைக் குறித்து அஞ்சவேண்டாம், அஞ்சவேண்டாம். இந்த ஆபத்தால் தேக ஆணி நேரிடாது. கால பேதத்தால் நேரிடினும் நான் தங்களை எவ்விதத்தாலாயினும் திருவருள் வல்லபத்தைக் கொண்டு திரும்பவும் பார்ப்பேன்: பேசிக்களிப்