பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
143

பேன். இது சத்தியம். இந்த வார்த்தை யென் வார்த்தையன்று. திருச்சிற்றம்பல முடையார் செல்வப் பிள்ளை வார்த்தை. தேகத்திற்கு ஆனி வருவதாகக் கண்டாலும் அஞ்ச வேண்டாம். வந்தால் வரட்டும். திரும்பவும் உடனே மிகுந்த விரைவில் என்னைப் பார்த்து பேசிக் களிப்பீர்கள். திருவருளாணை யிது. சற்றுங் கலங்க வேண்டாம். திருச்சிற்றம்பலம்.

”இது புதுச்சேரி சுவாமிகள் சமாதி திருக்கோயில் புகுமுன்னர் சந்நிதானத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டற்குப் பதில் திருமுகக் குறிப்பு”. (அடிகளாருடையது.)

பக்—120

ஐயாவிற்கு அன்பர் கடிதம்,

கடிதம்-6.

அன்புந் தயையு முடைய அய்யா அவர்கட் கனத்தானந்த வந்தன முற்றெழுதிக் கொண்ட தியாதெனின்,

அவிடத்திய சுபயோக க்ஷேமாதி சுபத்தை அடிக்கடி கேழ்க்க ஆவலுள்ளவகை யிருக்கிறேன். நீங்களனுப்பிய கடிதமும் ரூபாயும் வந்து சேர்ந்து அதிலுள்ள மிச்ச ரூ. ௫௯-யும் அனுப்பித்திருக்கிறேன். யென்னாலாக வேண்டியவைகளுக்குக் குத்தரவாக பலவாறு பிரார்த்திக்கின்றனன்.

ஸ்ரீ. வேலு முதலியாருக்கும் ௱-ஸ்ரீ. நாயின ரெட்டியாருக்குந் தங்கள் கடிதத்தைக் காண்பித்தேன். ௱-ஸ்ரீ வேலு முதலியார் நாளைய தினம் காலமே பிராயாணப்பட்டுப் போரார்கள். நானும் ரெட்டியாரும் திண்டிவனம் வரையில் போய் வழி விட்டுவிட்டு வருகிருேம். யெனக்கு வேண்டிய