பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12

யாகும். இதைத்தான் ‘அடிப்படை மொழி’ என்பர் ஆய்வாளர். கற்பனை கலவாததாய்-உணர்ச்சியோ, பிற உள்ள நெகிழ்ச்சிகளோ, காய்தல் உவத்தல் என்ற வேறுபாடுகளோ கலவாததாய்-ஒரு பொருளின் தன்மையை உரையிட்டு உணரத்தக்க வகையில் காட்டுவதே உரை. (தட்டான் பொன்னை உரையிட்டுக் காட்டுவது போன்று) ஆனால் பாட்டோ இதற்கு நேர்மாறக உணர்ச்சி. கற்பனை முதலியவற்றின் இடையிலே தோய்ந்து அணிநலம் முதலியன பெற்றுப் பாடுவோன் உள்ளத்தளவு உயர்வோ அன்றித் தாழ்வோ பொருந்தப் பொருளை விளக்குவதாகும். இந்த உண்மையை மேலை நாட்டு அறிஞர்கள் நன்கு விளக்கியுள்ளார்கள். மொழி, இலக்கியம் இரண்டையும் வரையறுத்த ஆய்வாளர் எண்ணத்தை உணர்த்துவது மொழியென்றும் உணர்வை உணர்த்துவது இலக்கியம் என்று கூறுவர்

I convey my thought to you—this is language
I have emotion —that is literature
If the primary object be to convey the thought and the emotion where with it is touched by a secondary consideration, serving only to make the thought apprehended more pleasantly and more completely, the writing is some form of Prose Literature, as history or criticism. If on the other hand, the emotion be of first importance, and the thought seems to take place in the mind through the avenues of feeling, then the writing is some form of better letters—probably in the poetry or fiction. (Winchester, P. 182)

இவ்வாறு எழுத்துக்கு வரிவடிவம் கொடுக்கும் நிலையிலேயே ‘உரை’ உண்டாகியிருக்க வேண்டும் என்பது உண்மையன்றே உள்ளத்துத் தோன்றிய எண்ணத்தை மற்றவருக்கு உணர்த்த நினைத்த மனிதன் எண்ணி எண்ணி எழுத்தெழுத்தாக உச்சரித்து, சொல்லின் பின் சொல்லாக மெல்ல உரைத்திருப்பானன்றாே? எனவே முதலில் தோன்றியது உரை எனக்கொள்ளல் பொருத்தமானதாகும்.